Page Loader
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல் 
நாளை அரசு விடுமுறை என்பதால் இந்த வாரத்தின் வீகென்ட் இன்று முதலே தொடங்கிவிட்டது

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல் 

எழுதியவர் Srinath r
Sep 27, 2023
07:19 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வாரம் தமிழ் திரையுலகில் ஜெயம் ரவியின் இறைவன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 மற்றும் சித்தார்த்தின் சித்தா உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள படங்கள் என்னவென்று பார்ப்போமா? இறைவன்- தனி ஒருவன் வெற்றிக்கு பின் மீண்டும் ஜெயம் ரவி- நயன்தாரா கூட்டணி, இறைவன் படம் மூலம் இணைந்துள்ளது. சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை அகமது இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தனி ஒருவனுக்கு பின் ஜெயம் ரவி- நயன்தாரா கூட்டணி இணைவதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2nd card

திரையரங்க வெளியீடுகள்

சந்திரமுகி 2- பி வாசு இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரணவத், ராதிகா சரத்குமார் என பேரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள படம், கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'சந்திரமுகி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். சித்தா- இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சித்தா. இது ஒரு குடும்ப டிராமா படம் எனவும், தொலைந்து போன தனது உறவுக்கார சிறுமியை, நடிகர் சித்தார்த் கண்டுபிடிப்பது தான் கதை எனவும் கூறப்படுகிறது.

3rd card

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரியஸ்கள்

அடியே: நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள 'அடியே' என்ற சயின்ஸ் பிக்சன் படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை மறுநாள்(செப்டம்பர் 29ஆம் தேதி) வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். டர்ட்டி ஹரி: இது தவிர கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'டர்ட்டி ஹரி'(Dirty Hari) என்ற தெலுங்கு படம் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு, நாளை மறுநாள் (செப்டம்பர் 29ஆம் தேதி) ஆஹா(Aha) ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கிங் ஆப் கோத்தா: துல்கர் சல்மான் நடிப்பில் உருவான இந்த திரைப்படமும் வெள்ளி அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது