
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள்கள், மருமகன் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷின் குழந்தைகளான யாத்ரா, லிங்கா ஆகியோர் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் புகைப்படமும், ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினிக்கு பாரம்பரிய முறைப்படி பாத பூஜை செய்யும் புகைப்படமும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில், நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி, லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
2nd card
அடுத்தடுத்து திரைக்கு வரும் ரஜினி படங்கள்
சினிமாவில் நடிகர் ரஜினியின் மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. நேற்று தீபாவளியை முன்னிட்டு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், ரஜினி நடிக்கும் லால் சலாம் படத்தின் டீசர் வெளியானது.
பொங்கலுக்கு வெளியாகும் இத்திரைப்படத்தில், ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில், எக்ஸ்டெண்டெட் கேமியோ செய்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கும் தலைவர்170 திரைப்படத்திற்கான படப்பிடிப்பிலும், ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, தலைவர்171 திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினி இணைவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Instagram அஞ்சல்