Loading...
ஒரே மேடையில் ரஜினி, அஜித், தோனி: அனிருத் - காவ்யா மாறன் வரவேற்பு விழாவில் குவிந்த திரையுலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள்
அனிருத் திருமண வரவேற்பில் ரஜினி, அஜித், தோனி உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

ஒரே மேடையில் ரஜினி, அஜித், தோனி: அனிருத் - காவ்யா மாறன் வரவேற்பு விழாவில் குவிந்த திரையுலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள்

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
12:31 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் இரண்டாம் நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (நவம்பர் 22) இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் குமார், ஷாலினி, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி, சாக்ஷி தோனி ஆகியோர் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். சினிமாவின் 'தல' அஜித் குமாரும், கிரிக்கெட்டின் 'தல' தோனியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி உரையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன. முதல் நாள் வரவேற்பில் பங்கேற்காத நடிகர் சிவகார்த்திகேயனும் நேற்று நேரில் வந்து அஜித், ரஜினி மற்றும் தோனியுடன் மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

முன்னணி இயக்குநர்கள் பங்கேற்பு

சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களின் சங்கமம்

திரையுலக நட்சத்திரங்கள் அணிவகுத்த இந்த விழாவில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடனும், ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடியாகவும் வந்து மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

நடிகர் சிம்பு (STR), சிவகார்த்திகேயன், ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், பூஜா ஹெக்டே, உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ, H. வினோத், பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா அம்பானி தம்பதியினர், கிரிக்கெட் நட்சத்திரங்கள் அஸ்வின் ரவிச்சந்திரன், தீப்தி சர்மா, முத்தையா முரளிதரன், கேன் வில்லியம்சன், டேனியல் வெட்டோரி மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோரும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

ரசிகர்களிடையே எழுந்த கேள்வி

அனிருத் திருமண வரவேற்பில் தனுஷ் பங்கேற்காதது ஏன்?

ஒட்டுமொத்தத் திரையுலகமும் கிரிக்கெட் பிரபலங்களும் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் குவிந்திருந்த நிலையில், அனிருத்தை '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய நடிகர் தனுஷ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

'DnA' என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தனுஷ் - அனிருத் கூட்டணிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT