அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களை இந்த OTT தளத்தில் காணலாம்
செய்தி முன்னோட்டம்
இந்த பொங்கலுக்கு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என அவரது ரசிகர்கள் வருந்தினாலும், துபாய் கார் ரேஸில் வெற்றிபெற்று அவர்கள் கொண்டாட ஒரு தருணத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அஜித்.
அதேபோல தற்போது பிரபல OTT தளமான நெட்ஃபிலிக்ஸ்-உம் அவர்களை மகிழும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நடிகர் அஜித்தின் இரண்டு படங்களின் ஓடிடி உரிமையை அந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களும் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை என்றாலும், அவற்றின் வெளியீட்டு உரிமையை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக நெட்ஃப்லிக்ஸ் இன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மற்றவை
Netflix கைப்பற்றியுள்ள மற்ற படங்களின் வரிசை
அஜித்தின் இந்த இரண்டு படங்கள் மட்டுமின்றி மேலும் சில சுவாரசிய படங்களில் வெளியீட்டு உரிமையை Netflix கைப்பற்றியுள்ளது.
அது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிவரும் டிராகன் படத்தின் உரிமையையும் இந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும், பிரதீப் ரங்கநாதன் அடுத்து நடித்து வரும் மற்றொரு பெயரிடப்படாத படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது.
அதேபோல துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் காந்தா படத்தின் உரிமையையும் கமல் ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் தக் லைஃப் படத்தின் உரிமையையும் கைப்பற்றியுள்ளது என அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
. @NetflixIndia 's 2025 Tamil movies lineup..@ProRekha pic.twitter.com/sJ0dtin69r
— Ramesh Bala (@rameshlaus) January 15, 2025