Page Loader
லியோ திரைப்படம் வெற்றி பெற  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சுவாமி தரிசனம்
லியோ திரைப்படத்தின் வசனகர்த்தாவான ரத்தினகுமார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் திருப்பதியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

லியோ திரைப்படம் வெற்றி பெற  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சுவாமி தரிசனம்

எழுதியவர் Srinath r
Oct 12, 2023
10:57 am

செய்தி முன்னோட்டம்

லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர் குழுவுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், திரிஷா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள லியோ திரைப்படம், அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் தமிழ்நாடு அரசு லியோ திரைப்படத்திற்கு 6 நாட்களுக்கு சிறப்பு காட்சி திரையிட்டுகொள்ள அனுமதி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லியோ திரைப்படம் வெற்றி பெற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் திருப்பதி மலை ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

திருப்பதிக்கு சென்றுள்ள லியோ இயக்குனர் குழு