
நயன்தாராவுடன் கவின் முதல் அந்தகன் படப்பாடலை வெளியிடும் விஜய் வரை!
செய்தி முன்னோட்டம்
இந்த வாரம் துவங்கியதிலிருந்து தொடர்ச்சியாக பல சுவாரசிய சினிமா அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
சன் டிவியில் 'ராயன்' பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு, அஸர்பைஜானில் ஷூட்டிங்கை நிறைவு செய்த 'விடாமுயற்சி' குழு எனத்தொடங்கி ஸ்வீட் சர்ப்ரைஸாக பிரசாந்தின் 'அந்தகன்' படப்படலை தளபதி விஜய் வெளியிட உள்ளார் என்பது வரை இந்த 2 நாட்களில் பல அப்டேட்டுகள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது.
ராயன்
இந்த வாரம் வெளியாகிறது ராயன்
ராயன் படத்தின் டிக்கெட் விற்பனை துவங்கிவிட்டது. இந்த ஜூலை 26ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் வீடியோ நேற்று சன் டிவி ஒளிபரப்பியது. அதில் தனுஷின் இயக்கத்தை பலரும் பாராட்டி இருந்தனர்.
முத்தாய்ப்பாக நிகழ்ச்சியின் இறுதியில் தனுஷும், ஏ.ஆர்.ரஹ்மானும் மேடையில் பாட, அப்போது 'உசுரே நீ தானே..நீ தானே" என்ற வரிகளுக்கு தனுஷும், அவரது மகன் யாத்ராவும் செய்கையால் ஒருவரை ஒருவர் குறிப்பிட்டு கொண்டது, சோ ஸ்வீட் தருணம்!
அடுத்ததாக ஆந்திராவில் ப்ரீ-ரிலீஸ் நடத்திய இக்குழுவை அரங்கம் அதிர ரசிகர்கள் வரவேற்றனர்.
அப்போது தனுஷிடம் தெலுங்கு சினிமாவில் பிடித்த நடிகர் யார் என கேட்டதற்கு, 'பவன் கல்யாண்' எனக்கூறியதும், அரங்கத்தில் எழுந்த சத்தம் விண்ணை பிளந்தது.
விடாமுயற்சி
அஸர்பைஜானுக்கு பை பை சொல்லிய படக்குழு
பல நாட்களாக எடுக்கப்பட்டு வந்த அஜித்தின் 'விடாமுயற்சியின்' படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டது. படக்குழு அஸர்பைஜான் ஷெட்யூலை முடித்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஹைதராபாதில் சில நாட்களும், சென்னையில் சில நாட்களும் மட்டும் படப்பிடிப்பு மீதம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படம் இந்தாண்டு தீபாவளி, அக்டோபர் 31 அன்று வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கவின்- நயன்தாரா
கவின் வெளியிட்ட புகைப்படத்தில் நயன்தாரா
நடிகர் கவின் கடைசியாக 'ஸ்டார்' படத்தில் நடித்திருந்தார். நல்ல விமர்சனங்களை பெற்றது அந்த திரைப்படம். அடுத்ததாக இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பெக்கர், கிஸ், மாஸ்க் என்று படங்களை நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் நயன்தாரா உடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை நயன்தாராவும் ஷேர் செய்துள்ளார்.
இது ஏதேனும் புதிய படத்திற்கான ஸ்டில்-ஆ? அல்லது ஏதேனும் விளம்பர ஷூட்டிங்-ஆ? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
அந்தகன்
அந்தகன் படப்பாடலை விஜய் வெளியிடுகிறார்
நடிகர் பிரஷாந்த் நடிப்பில், அவரது தந்தை தியாகராஜனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன்.
பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம், இறுதியாக வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது.
இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாடலை, வரும் ஜூலை 24ஆம் தேதி, தளபதி விஜய் வெளியிட உள்ளார்.
தற்போது இருவரும் GOAT திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.