NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரீவைண்ட் 2023: திரைத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய சர்ச்சைகள் 1 - அமீரும், ஞானவேல் ராஜாவும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரீவைண்ட் 2023: திரைத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய சர்ச்சைகள் 1 - அமீரும், ஞானவேல் ராஜாவும்

    ரீவைண்ட் 2023: திரைத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய சர்ச்சைகள் 1 - அமீரும், ஞானவேல் ராஜாவும்

    எழுதியவர் Srinath r
    Dec 07, 2023
    06:05 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் வெடித்த பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான சர்ச்சை, இவ்வாண்டில் தமிழ் சினிமாவில் உருவான மிகப்பெரிய சர்ச்சையாக மாறிப்போனது.

    பருத்திவீரன் தொடர்பாக அப்படத்தின் இயக்குனர் அமீர் கூறிய கருத்துக்களும், அதுக்கு பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்த கருத்துக்களும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை இரண்டாகியது.

    படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சனையில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும், இடையே ஏற்பட்ட பிரச்சனையை, பல்வேறு சினிமா சங்கங்கள் தலையிட்டும் சரிசெய்ய முடியாததால், விவகாரம் உயர்நீதிமன்றம் சென்றது.

    அமீர் வழக்கு தொடர்ந்ததால், சூர்யா குடும்பத்துக்கு இருந்த 'குட் மேனன்' இமேஜ் பாதிக்கப்பட்டது.

    17 வருடங்களுக்கு முன்னால் வெளியான ஒரு திரைப்படம், தமிழ் திரையுலகில் இப்போது பூகம்பத்தை கிளப்பியது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    2nd card

    சர்ச்சையின் தொடக்கப் புள்ளியான அமீரின் நேர்காணல்

    கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில், சூர்யாவின் தம்பி கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். வழக்கமான மதுரை பாணி படங்களை விட தனித்துவமான இப்படம், மாபெரும் வெற்றி பெற்றது.

    இப்படத்தின் பட்ஜெட் தொடர்பாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே கடந்த 17 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது.

    அண்மையில் தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் 25வது படமான ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, கார்த்தியை இயக்கிய அனைத்து இயக்குனர்களும் அழைக்கப்பட்டனர்.

    இருப்பினும், அவரின் முதல் படத்தை இயக்கிய அமீர் அதில் பங்கேற்கவில்லை.

    இது குறித்து ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது அமீர், பருத்திவீரன் திரைப்படம் தன்னை மன வருத்தத்திற்கு உண்டாக்கியதாக தெரிவித்திருந்தார்.

    3rd card

    ஞானவேல் ராஜாவின் பதிலடி

    பின்னர் மற்றொரு யூட்யூப் சேனலின் நேர்காணலில் பங்கேற்ற ஞானவேல் ராஜாவிடம், அமீரின் பேட்டி குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த ஞானவேல் ராஜா, பருத்திவீரன் கணக்கு விஷயத்தில் தன்னை அமீர் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

    பன்றிகளுக்கு அமீர் பொய் கணக்கு எழுதியதாகவும், படத்தில் உழைத்து சம்பாதிக்காமல், திருடி சம்பாதிப்பதாகவும், அமீர் வேலை தெரியாமல் தன் பணத்தில் வேலை கற்றுக்கொண்டதாகவும், ஞானவேல் ராஜா பேசியிருந்தார்.

    மேலும், படத்திற்கு தொடர்பில்லாத நடிகர் சூர்யா மற்றும் அவர் தந்தை சிவக்குமார் மீது, அமீர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிந்திருப்பதாக ஞானவேல் தெரிவித்தார்.

    இதற்கு அறிக்கை மூலம் பதில் அளித்த அமீர், ஞானவேல் ராஜா தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும், தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் கூறினார்.

    4th card

    அமீருக்கு ஆதரவளித்த திரை பிரபலங்கள்

    இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சக இயக்குனர்களான சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

    சமுத்திரக்கனி வெளியிட்டிருந்த அறிக்கையில், படத்தின் தொடக்கத்திலேயே ஞானவேல் ராஜா படத்திலிருந்து விலகியதாகவும், பின்னர் அமீர் பலரிடமும் கடன் வாங்கி அந்த படத்தை முடித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

    மற்றொரு நடிகரும் மற்றும் இயக்குனரான சசிகுமார், அமீருக்கு திரைப்படத்தை முடிக்க தான் பணம் வழங்கியதாகவும் கூறியிருந்தார்.

    இது தவிர, இயக்குனர்கள் பாரதிராஜா, பொன்வண்ணன், கரு பழனியப்பன், பாடல் ஆசிரியர் சினேகன் ஆகியோர் ஞானவேல் ராஜாவை கண்டித்து இருந்தனர்.

    5th card

    பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஞானவேல் ராஜா

    பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கண்டனங்களை அடுத்து, ஞானவேல் ராஜா தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுத்தார்.

    அந்த அறிக்கையில், "அமீர் சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது."

    "அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.

    இருப்பினும், ஞானவேல் ராஜாவின் அறிக்கையை பலர் கண்டித்தனர். சசிகுமார், "போலியான வருத்தத்திற்கு உண்மை பலியாக முடியாது" என காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

    "ஞானவேல் ராஜா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என, சமுத்திரக்கனி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்

    6th card

    பருத்திவீரன் பிரச்சனைக்கு பணம் தான் தீர்வு- கரு பழனியப்பன்

    இயக்குனரின் அமீரின் நண்பரும், இயக்குநருமான கரு பழனியப்பன், பருத்திவீரன் தொடர்பான பிரச்சனைக்கு பணம் தான் தீர்வாகும் என கூறுகிறார்.

    மேலும், சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் அமீர் கேட்கும் ₹1.5 கோடியை அவருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

    அதற்கு காரணமாக, அமீர் உழைப்பால் தான் கார்த்திக்கு வெற்றிகரமான சினிமா வாழ்க்கை அமைந்தது என கரு பழனியப்பன் வாதிடுகிறார்.

    மேலும், ஞானவேல் ராஜாவிற்கு ஆதரவாக சூர்யாவின் குடும்பம் இருப்பதாக, கரு பழனியப்பன் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது நீர்த்துப் போய் உள்ள பருத்திவீரன் பிரச்சனை, மீண்டும் பூதாகரமாக சின்ன தீப்பொறிப் போதும் என்பது, தமிழ் சினிமாவின் எழுதப்படாத உண்மை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமீர்
    இயக்குனர்
    இயக்குநர் பாரதிராஜா
    தயாரிப்பாளர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமீர்

    வாடிவாசல் படத்தில் நடிக்கும் அமீர்; வெற்றிமாறன் பகிர்ந்த புகைப்படம் வைரல் வெற்றிமாறன்
    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா  இயக்குனர்
    அமீருடனான சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர்
    "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது"- ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம் திரைப்படம்

    இயக்குனர்

    ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் இயக்கத்தில் உருவாகும், எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு ட்விட்டர்
    இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் சினிமா
    விடுதலை-2 திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் விஜய் சேதுபதி
    பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி தெரிவித்த கமல் கமல்ஹாசன்

    இயக்குநர் பாரதிராஜா

    வெளியானது 'மார்கழி திங்கள்' படத்தின் டீசர்  இயக்குனர்
    "என் அப்பாவே என்ன நம்பல"- மனம் திறந்த இயக்குனர் மனோஜ் பாரதிராஜா சினிமா
    எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்கள் சன் டிவி
    'கோ' திரைப்பட நாயகிக்கு திருமணம்?- இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம்

    தயாரிப்பாளர்

    சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை கோலிவுட்
    நடிகர் அஜித், வாங்கிய பணத்தினை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு  நடிகர் அஜித்
    பிரபலங்கள் துக்க நிகழ்வுகளில் வீடியோவுக்கு அனுமதி மறுப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு கோலிவுட்
    அடுத்தாண்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது தங்கலான் திரைப்படம் இயக்குனர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025