Loading...
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து இதுவரை நாம் இதுவரை அறிந்தவை
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது

அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து இதுவரை நாம் இதுவரை அறிந்தவை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2026
11:07 am

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோரது திருமணம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன. இவர்களின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், திருமண வரவேற்பு பத்திரிகையும், VVIP அழைப்பாளர்களும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளனர். வெளிவந்த ஊடகத் தகவல்களின்படி, அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஜோடி கிரீஸ் நாட்டில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ எளிய முறையில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வு வரும் நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. சென்னையில் நவம்பர் 21-ஆம் தேதி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்கான பத்திரிகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பத்திரிகை

பாரோக் பாணியில் வைரலாகும் வரவேற்புப் பத்திரிகை

பிங்க் விஸில் மேன் நிறுவனத்தின் ரஞ்சனி ஐயங்காரால் வடிவமைக்கப்பட்ட இப்பத்திரிக்கை, தந்த வெள்ளை மற்றும் பவுடர் நீல நிற Baroque கலை வடிவ பெட்டியில் விக்டோரியன் பாணி முத்திரைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் தம்பதியினர், பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அஜித்குமார் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. .

ADVERTISEMENT