Loading...
தவெக ஆட்சியின் 6 மாத சாதனை: ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகளுக்கு 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
6 மாத காலத்தில் ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்

தவெக ஆட்சியின் 6 மாத சாதனை: ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகளுக்கு 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2026
12:36 pm

செய்தி முன்னோட்டம்

தவெக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 6 மாத காலத்தில் ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக மாநிலத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இந்த முதலீடுகளின் மூலம் தமிழகம் முழுவதும் 1,32,771 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதம் தவெக ஆட்சி அமைந்தது முதல் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விரிவான புள்ளிவிவரங்களை அமைச்சர் கீர்த்தனா பகிர்ந்து கொண்டுள்ளா. அதில், 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன; கையெழுத்தான 112 ஒப்பந்தங்களில் 83 ஒப்பந்தங்கள் திட்டங்களாக மாற்றப்பட்டு அடுத்தகட்ட செயல்பாட்டுக்கு வந்துள்ளன என பதிவிட்டுள்ளார்.. இதன் மூலம் ரூ.59,485 கோடி மதிப்பிலான முதலீடு உறுதியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முக்கியத் துறைகள்

முதலீடுகள் குவிந்துள்ள முக்கியத் துறைகள்

முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய இடமாக தமிழ்நாடு மாறி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் கீர்த்தனா, கீழ்க்கண்ட முக்கியத் துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1. ஜவுளி மற்றும் ஆட்டோமொபைல் துறை.

2. பொது உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை.

3. மருந்துகள் மற்றும் சுகாதாரத் துறை.

4. விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புத் துறைகள்.

"முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின்கீழ், தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிப் பயணம் புதிய வேகமெடுத்துள்ளது" என அமைச்சர் கீர்த்தனா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT