அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்: LPG, UPI மற்றும் வங்கி விதிகளில் திருத்தம்
செய்தி முன்னோட்டம்
2026 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. எல்.பி.ஜி சிலிண்டர் மானியம், யு.பி.ஐ கட்டணங்கள், எஃப்.டி வட்டி விகிதங்கள் மற்றும் வங்கிச் சேவைகள் ஆகியவற்றில் ஏற்படும் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த விதிகளின்படி, இந்த வங்கிகள் தங்களின் மொத்த நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களை ஒவ்வொரு வேலை நாளிலும் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிட வேண்டும். முக்கிய மாற்றங்கள் பற்றிய முழு விவரங்கள் இதோ:
# 1
LPG சிலிண்டர் மானியத்திற்கு பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்
வரும் அக்டோபர் 1 முதல் மானிய விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு பயோமெட்ரிக் (ஆதார்) அங்கீகாரத்தை செய்து முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சரிபார்ப்பை முடித்த நுகர்வோர் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. நிலுவையில் உள்ளவர்கள் சிலிண்டர் விநியோகத்தின் போதோ, ஏஜென்சி அலுவலகத்திலோ அல்லது எரிவாயு நிறுவனத்தின் மொபைல் செயலி மூலமாகவோ இதைச் செய்து முடிக்கலாம்.
சரிபார்ப்பை முடிக்கத் தாமதமானாலும் சிலிண்டர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# 2
UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகள்
அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட சில குறிப்பிட்ட வர்த்தகர் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரை வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) விதிக்கப்பட உள்ளது.
எனினும், இக்கட்டணம் வணிகர்களுக்கே பொருந்தும் என்பதால், தனிநபர்களுக்கு இடையேயான (P2P) பரிவர்த்தனைகளுக்கோ அல்லது சாமானிய வாடிக்கையாளர்களுக்கோ எவ்விதக் கூடுதல் கட்டணமும் நேரடியாக வசூலிக்கப்படாது.
# 3
FD மற்றும் NRI சொத்து வரி விதிகளில் மாற்றம்
ரூ.3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த வைப்புத்தொகைகளுக்கான (Bulk Deposits) வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் (NRI) இருந்து சொத்து வாங்குபவர்களுக்கான டி.டி.எஸ் (TDS) செயல்முறை எளிமையாக்கப்பட்டு, பான் அடிப்படையிலான படிவம் 141 அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் பல பரிவர்த்தனைகளுக்கு 'TAN' தேவையில்லை.
# 4
அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வங்கி வேலைநிறுத்தம்
வாரத்திற்கு 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இதனால் அக்டோபர் இறுதியில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்களது முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.