LOADING...
உலகளாவிய நல்லெண்ணப் பட்டியல் 2026: இந்தியாவுக்கு என்ன ஸ்கோர்? முதலிடத்தில் எந்த நாடு?
சுவாரசியமான சர்வதேச கணக்கெடுப்பு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன

உலகளாவிய நல்லெண்ணப் பட்டியல் 2026: இந்தியாவுக்கு என்ன ஸ்கோர்? முதலிடத்தில் எந்த நாடு?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 22, 2026
04:04 pm

செய்தி முன்னோட்டம்

உலக அளவில் எந்தெந்த நாட்டு மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும், பழகக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறித்த சுவாரசியமான சர்வதேச கணக்கெடுப்பு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. Democracy Perception Index 2026 என்ற அமைப்பு, 85 நாடுகளை சேர்ந்த சுமார் 46,000 மக்களிடம் நடத்திய இந்த விரிவான ஆய்வின் மூலம் உலகளவில் மிகவும் விரும்பப்படும் மற்றும் விரும்பப்படாத நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலிடம்

முதலிடத்தை பிடித்த சுவிட்சர்லாந்தும் கனடாவும்

இந்த உலகளாவிய Nice Index-ல் சுவிட்சர்லாந்தும், கனடாவும் தலா +36 புள்ளிகளுடன் கூட்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளன. சுவிஸ் மக்கள் மிகவும் கண்ணியமானவர்களாகவும், பிறருக்கு மதிப்பளிப்பவர்களாகவும் அறியப்படுகிறார்கள். அதேபோல், உலகிலேயே மிகவும் அன்பான மக்கள் வாழும் இடமாக நீண்டகாலமாக பார்க்கப்படும் கனடா தனது நற்பெயரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் (+34) இரண்டாவது இடத்தையும், சுவீடன் (+33) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

டாப் 15

டாப் 15 பட்டியலில் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம்

இந்த கணக்கெடுப்பில் முதல் 15 இடங்களை பிடித்த நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலி மற்றும் நார்வே ஆகிய நாடுகள் +32 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களை பகிர்ந்துள்ளன. ஸ்பெயின் நாடு +31 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்திரேலியா, டென்மார்க், நியூசிலாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் தலா +30 புள்ளிகளுடன் ஒரே இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

Advertisement

இந்தியா

இந்தியாவுக்கு கிடைத்த மைனஸ் ஸ்கோர்

இந்த நல்லெண்ணக் குறியீட்டில் இந்தியா 28-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, -2 என்ற எதிர்மறைப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதற்கான துல்லியமான காரணங்கள் ஆய்வில் வரையறுக்கப்படவில்லை. விருந்தினர்களை உபசரித்தாலும், அந்நியர்களிடம் பொதுவாக முறைப்படியான முகமன் கூறுகளை உடனே பரிமாறிகொள்ள தயங்கும் இந்தியர்களின் பழக்கம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் உண்மையான நிலவரத்தை வெறும் 46,000 பேரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முழுமையாகப் பிரதிபலிக்காது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் நெகட்டிவ் புள்ளிகளை பெற்ற நாடுகளின் பட்டியலில் பல முன்னணி நாடுகள் இடம் பிடித்துள்ளன. சவூதி அரேபியா(-1), கொலம்பியா(-2); ஏமன், வங்காளதேசம், லெபனான், கியூபா, நைஜீரியா(-3); வெனிசுலா, மியான்மர், பெலாரஸ்(-5); பாகிஸ்தான்(-9); ரஷ்யா(-11).

Advertisement