ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
செய்தி முன்னோட்டம்
போரால் பாதிப்படைந்துள்ள காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்லும், எகிப்து-காசா எல்லையான ரஃபா எல்லையை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பார்வையிட்டார்.
இதுவரை பல விமானங்கள் மற்றும் லாரிகளில் நிவாரண பொருட்களுடன் வந்திருந்தாலும், அவை எதுவும் காஸா பகுதிக்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
"நாங்கள் ரஃபா எல்லையை லாரிகள் கடந்து செல்ல, எகிப்து, இஸ்ரேல், அமெரிக்கா என அனைத்து தரப்பினருடனும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்."
"காசாவுக்கு முடிந்தவரை நிவாரண பொருட்களை அனுப்புவது முழுமையான தேவையாகும்".
"இது ஒரு நிலையான முயற்சியாக இருக்க வேண்டும்" என அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் பைடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், 20 லாரிகள் மதிப்பிலான நிவாரண பொருட்களை காசாவிற்கு அனுப்ப எகிப்து ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
நிவாரண பொருட்களை விரைவாக காஸாவிற்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அன்டோனியோ தகவல்
#UPDATE UN Secretary-General Antonio Guterres paid a visit to the Egyptian side of the Rafah border crossing with Gaza on Friday to oversee preparations for the delivery of aid to the war-torn enclave.
— AFP News Agency (@AFP) October 20, 2023
📸 Antonio Guterres during a press conference in Cairo pic.twitter.com/rc2e7P8BgD