LOADING...
வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்: டிரம்ப்
பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முடிவுக்கு வழிவகுக்கும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்

வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்: டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2025
07:51 am

செய்தி முன்னோட்டம்

வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவுடன் தனது நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ட்ரூத் சோஷியலில் இது குறித்த ஒரு பதிவில், வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் இருப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் வெற்றிகரமான முடிவுக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "நமது இரு பெரிய நாடுகளுக்கும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்!" என்று கூறினார். SCO உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடினுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியாவும், ரஷ்யாவும், சீனாவிடம் "இழந்துவிட்டதாக" வன்மையாக கண்டித்த டிரம்பின் நிலைப்பாடு தற்போது மென்மையான தொனிக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விமர்சனம்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வர்த்தகம் செய்யும் இந்தியாவை கண்டித்த டிரம்ப்

முன்னதாக, இந்தியாவின் வர்த்தக நடைமுறைகள் மற்றும் ரஷ்யாவுடனான எரிசக்தி உறவுகளை டிரம்ப் விமர்சித்திருந்தார். இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ஏற்றுமதிகள் மீதான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்க அமெரிக்கா எடுத்த முடிவு உட்பட பல மாதங்களாக நடந்த கொந்தளிப்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் எழுந்தன. இந்தியா, அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க முன்வந்ததாக டிரம்ப் ஒப்புக்கொண்ட போதிலும், இந்த நடவடிக்கை "மிகவும் தாமதமாக முன்மொழியப்பட்டது" என்று அவர் வாதிட்டார்.

பேச்சுவார்த்தை

அடுத்தவாரம் வர்த்தக குழு பேச்சுவார்த்தை நடத்தும்?

வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டதை தொடர்ந்து, அடுத்த வாரம் இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக பிரதிநிதிகளை பரிமாறிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஜனாதிபதி டிரம்ப் அறிக்கைக்கு இந்திய பிரதமரின் பதில் என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே வேளையில், வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்கும் இரு நாடுகளும் வெற்றி பெறும் வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கும் அடுத்த வாரம் ஒரு இந்திய வர்த்தகக் குழு அமெரிக்காவிற்குப் புறப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறியுள்ளது.