
இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்
செய்தி முன்னோட்டம்
பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சென்றுள்ளார்.
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு வந்த மக்ரோன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவை இன்று சந்தித்து உரையாற்றுகிறார்.
இச்சந்திப்பில் மக்ரோன், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கவும், இரு-நாடு தீர்வு(two-state solution) குறித்து விவாதிக்க இருப்பதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7 ஆம் தேதி போர் தொடங்கியது முதல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் டச்சு பிரதமர் மார்க் ரூட்டே உள்ளிட்டோர் இஸ்ரேலுக்கு பயணம் செய்து தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இஸ்ரேல் வந்தடைந்தார் பிரான்ஸ் பிரதமர்
French President Emmanuel Macron arrived in Israel. pic.twitter.com/WNXccLwSEK
— Sprinter (@Sprinter99800) October 24, 2023