Loading...
நடுவானில் விமானத்தைக் கவிழ்க்க சதியா? விமானத்தை கடத்த முயற்சியா? பிளைதுபாய் விமானத்தில் நடந்தது என்ன?
நடுவானில் விமானத்தை கவிழ்க்க முயன்ற சம்பவமும், கத்திக்குத்துத் தாக்குதலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நடுவானில் விமானத்தைக் கவிழ்க்க சதியா? விமானத்தை கடத்த முயற்சியா? பிளைதுபாய் விமானத்தில் நடந்தது என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2026
05:21 pm

செய்தி முன்னோட்டம்

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்கு சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தில், நடுவானில் விமானத்தை கவிழ்க்க முயன்ற சம்பவமும், கத்திக்குத்துத் தாக்குதலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 180-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்த இந்த போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்ததாகச் சந்தேகிக்கப்படும் இணை விமானிக்கும் தலைமை விமானிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகராறு

நடுவானில் நடந்த தகராறு

விமானம் யோர்டான் வான்வெளியைக் கடந்தபோது, பொதுவான அவசரநிலையை குறிக்கும் '7700' மற்றும் விமான கடத்தலைக் குறிக்கும் '7500' ஆகிய சிக்னல்கள் அனுப்பப்பட்டன.

இதன் விளைவாக, விமானம் சில நிமிடங்களிலேயே 34,000 அடியிலிருந்து 16,600 அடிக்கு மிக வேகமாகக் கீழே இறங்கியது. இதனால் பயணிகள் அலறியடித்து பீதியடைந்தனர்.

இணை விமானி, கத்தியால் தலைமை விமானியைத் தாக்கி விமானத்தை கீழே மோதி அழிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

காக்பிட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதும், சாதாரண உடையில் பயணித்த மற்றொரு ஜோடி விமானிகள் மற்றும் இஸ்ரேலிய பயணிகள் சிலர் காக்பிட் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

தாக்குதலில் காயமடைந்த தலைமை விமானியைக் காப்பாற்றிய அவர்கள், தாக்குதல் நடத்திய இணை விமானியை மடக்கி பிடித்துக் கட்டினர்.

தரையிறக்கம்

இஸ்ரேல் போர் விமானங்கள் எச்சரிக்கை & தரையிறக்கம்

கடத்தல் அச்சுறுத்தல் சிக்னல் கிடைத்தவுடன், இஸ்ரேலிய விமானப்படை உடனடியாக தனது போர் விமானங்களை ஏவியது.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

இஸ்ரேல் அரசு இந்த சம்பவத்தை "பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக" கருதி விசாரணை நடத்தி வருகிறது.

சவுதி அரேபியாவுடன் தூதரக உறவு இல்லாத நிலையில், பயணிகளை தாய்நாடு திரும்ப அழைத்து வர இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT