அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி; சந்தேக நபர் கைது
முன்னாள் அமெரிக்க அதிபரும், 2024 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது புளோரிடாவில் உள்ள அவரது கோல்ஃப் கிளப் அருகே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் அவர் அவர் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க ரகசிய சேவை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை 'கொலை முயற்சி'யாக விசாரித்து வருவதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு முன்னதாக கோல்ஃப் கிளப் அருகே துப்பாக்கியுடன் நபர் ஒருவரைக் கண்ட ரகசிய சேவை அதிகாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார், ஆனால் பின்னர் கைது செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் அவரது நோக்கம் இன்னும் வெளியிடப்படவில்லை
FBI அறிக்கை
FBI, ஒரு அறிக்கையில், "Florida, West Palm Beach க்கு பதிலளித்துள்ளது மற்றும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை படுகொலை செய்ய முயற்சிப்பது போல் தோன்றுகிறது" என்று கூறியது. கிளப்புக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தபோது டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இரகசிய சேவை முகவர்கள் அவரை கிளப்பில் ஒரு ஹோல்டிங் அறைக்கு அழைத்துச் சென்றதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, துப்பாக்கிதாரி டொனால்ட் டிரம்ப்பிலிருந்து சுமார் 300-500 கெஜம் (275-450 மீட்டர்) தொலைவில் இருந்தார். அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், துப்பாக்கி ஏந்திய நபர் தனது துப்பாக்கி, இரண்டு பைகள் மற்றும் பிற பொருட்களை கீழே போட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றார்.
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் அறிக்கை
இந்த சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும், அவர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மீதான இரண்டாவது கொலை முயற்சி குறித்து கருத்து தெரிவித்த ஜோ பைடன், அமெரிக்காவில் எந்தவிதமான வன்முறைக்கும் இடமில்லை என்றார். என்ன நடந்தது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் சேகரித்து வருவதால், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிபர் பைடன் மேலும் கூறினார்.