
உலக கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்; தமிழக அரசு சார்பில் வரவேற்பு
செய்தி முன்னோட்டம்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் சதுரங்க சாம்பியன் டி. குகேஷ் இன்று சென்னை திரும்பினார்.
உலகக்கோப்பை உடன் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடந்த இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்தார்.
கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக, இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் குகேஷ்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு..!#SunNews | #GukeshWorldChampion | @DGukesh pic.twitter.com/9vvWF0EFxJ
— Sun News (@sunnewstamil) December 16, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை வரவேற்க விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட ஏற்பாடு
— Sun News (@sunnewstamil) December 16, 2024
விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது#SunNews | #GukeshWorldChampion |… pic.twitter.com/dJb4uaJvnH
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#PHOTOS | சாம்பியன் குகேஷ்-க்கு உற்சாக வரவேற்பு!#SunNews | #GukeshWorldChampion | #WorldChessChampionship2024 | @DGukesh pic.twitter.com/WcrWa5YX55
— Sun News (@sunnewstamil) December 16, 2024
வரவேற்பு
நாளை பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு
உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, இன்று சென்னை திரும்பிய குகேஷ்-ஐ தமிழக அரசு அரசு சார்பில் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, பூங்கொத்து தந்து வரவேற்றார்.
அதோடு, நாளை, தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், குகேஷ்க்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
அப்போது அரசு சார்பாக, குகேஷ்க்கு ரூ.5 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் நிருபர்களுடன் பேசிய குகேஷ்,"உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி. டிங் லிரேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலக சாம்பியன்ஷிப் இறுதிக்கு செல்ல, சென்னை செஸ் ஒலிம்பியாட் உதவியது. கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி. அனைவரின் ஊக்கமும், எனக்கு புத்துணர்ச்சியை தந்தது," என்று கூறினார்.
embed
Twitter Post
#GukeshD lands at #Chennai Airport. He became the youngest World Chess Champion after winning the 2024 FIDE World Championship in Singapore.#GukeshDommaraju #GukeshWorldChampion #DGukesh #WorldChessChampionship2024 #WorldChessChampionship pic.twitter.com/QRhY00UgAO— News9 (@News9Tweets) December 16, 2024
embed
Twitter Post
The Grand reception of the 18th World Chess Champion! D Gukesh returns back home to Chennai today. Check out some photos of the absolutely insane crowd waiting for him at the Airport! Photos: @adityasurroy21#chess #chessbaseindia #GukeshWorldChampion #chennai #india pic.twitter.com/CcnUQQHTvX— ChessBase India (@ChessbaseIndia) December 16, 2024