அடுத்த செய்திக் கட்டுரை
வான்கடே மைதானத்தில் 'வந்தே மாதரம்' என பாடிய உலகக்கோப்பை வென்ற இந்திய அணி; வைரலாகும் வீடியோ
எழுதியவர்
Venkatalakshmi V
Jul 05, 2024
10:57 am
செய்தி முன்னோட்டம்
நேற்று பிசிசிஐ சார்பில் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு, மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திறந்த மாடி பஸ்சில் அணி வீரர்கள் ஊர்வலகமாக கூடி செல்லப்பட்டு, வான்கடே மைதானத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
உலக சாம்பியன்கள் தங்கள் வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் வகையில் 33,000 பேர் முன்னிலையில் வான்கடே மைதானத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின் போது, ஏ.ஆர்.ரஹ்மானின் தேசபக்திப் பாடலான 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட்டது.
அதை வீரர்களும் உடன் சேர்ந்து பாடிய போது கூட்டத்தினர் இடையே உணர்ச்சிகள் பொங்கியது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை ஏஆர் ரஹ்மான்-உம் ரீடிவீட் செய்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
'வந்தே மாதரம்' என பாடிய இந்திய அணி
Vande Mataram 🇮🇳 🏆 ❤️ 🤝👏 https://t.co/C45rNyrtNg
— A.R.Rahman (@arrahman) July 4, 2024