NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 24, 2024
    08:23 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்தது.

    2019-20, 2020-21, 2021-22, 2022-23 என நான்கு ஆண்டுகளுக்கான கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் 16 வயதுக்கு உட்பட்டோரும் விருதுகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆடவருக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை, மொஹம்மது ஷமி (2019-20), அஸ்வின் (2020-21), ஜஸ்பிரீத் பும்ரா (2021-22) மற்றும் ஷுப்மன் கில் (2022-23) வென்றனர். வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர்கள் ஃபரூக் இன்ஜினியர் மற்றும் ரவி சாஸ்திரி பெற்றனர்.

    card 2

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் கீப்பர் இல்லை

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

    தற்போது KL ராகுல் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டார் எனவும், வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது, இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக அமையுமா என்பது தெரியவில்லை.

    card 3

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி

    மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    காலிறுதி சுற்றில், ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸுடன் மோதி, 7-6(7-3), 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மகளிருக்கான கால் இறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காஃப், உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தார்.

    card 4

    உலக பேட்மிண்டன் தரவரிசை: சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடிக்கு முதலிடம்

    நேற்று, உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

    அதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி, முதலிடத்தை பிடித்துள்ளனர்.

    முன்னதாக இந்த ஜோடி இரண்டாம் இடத்திலிருந்து முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் நடந்து முடிந்த மலேஷியா மற்றும் இந்திய ஓபன் போட்டிகளில் இரண்டாவது வென்றதன் மூலமாக இவர்கள் தரவரிசை பட்டியலில் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    card 5

    கேலோ இந்தியா: தொடர்ந்து தங்க வேட்டையில் தமிழக வீரர்கள்

    தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா போட்டிகளின் 5-வது நாளான நேற்று நடைபெற்ற 110 மீ தடை ஓட்டம், 400 மீ ஓட்டம், ஸ்குவாஷ், சைக்கிளிங்கில் பெண்களுக்கான தனிநபர் பர்சுயிட், 10 கிமீ ஸ்கிராச் மற்றும் யோகாசனத்தில் ஆர்டிஸ்டிக் ஜோடி பிரிவு ஆகிய போட்டிகளில், தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளனர்.

    எனினும், நேற்று வரை நடைபெற்ற போட்டிகளின் பதக்கப்பட்டியலில், தமிழகம் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

    தமிழ்நாடு இதுவரை 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்கள் பெற்றுள்ளது.

    முதலிடத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம் உள்ளது. இவர்கள் 14 தங்கம் பதக்கங்கள் உட்பட மொத்தம் 45 பதக்கங்கள் வென்றுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    பிசிசிஐ
    விருது விழா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கிரிக்கெட்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் டென்னிஸ்
    ரஞ்சி கோப்பை 2024 : கவனத்தில் கொள்ள வேண்டிய டாப் 5 வீரர்கள் ரஞ்சி கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இயக்குனரை பங்கம் பண்ணிய ஆஸ்திரேலிய கேப்டன் பாக்சிங் டே டெஸ்ட்
    இலங்கை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியாவின் தொடர் தோல்விக்கு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணி
    ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள்; ஸ்டீவ் வாக்கின் சாதனையை முறியடித்தார் டேவிட் வார்னர் டேவிட் வார்னர்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : டாஸ் போடுவதில் தாமதம்; காரணம் இதுதான் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    மகனின் பிறந்தநாள்; இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்ட ஷிகர் தவான் கிரிக்கெட்

    பிசிசிஐ

    ஆசியக் கோப்பை வீரர்களின் தேர்வு குறித்த ரசிகரின் கேள்விக்கு லைவ்-ஷோவில் கொந்தளித்த கவாஸ்கர் ஆசிய கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதியை அறிவித்தது பிசிசிஐ ஒருநாள் உலகக்கோப்பை
    ஃபிட்னஸில் எப்போதும் கில்லி! பிசிசிஐயின் கடினமான சோதனையில் வெற்றி பெற்ற விராட் கோலி விராட் கோலி
    இன்ஸ்டாகிராமில் யோ-யோ ஸ்கோரை வெளியிட்டதால் விராட் கோலி மீது பிசிசிஐ அதிருப்தி விராட் கோலி

    விருது விழா

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025