
ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
நேற்று நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகளை வென்றுள்ளது.
அத்துடன், இத்தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.
கூடுதலாக, தொடர்ந்து 17ஆவது முறையாக டெஸ்ட் போட்டியை இந்திய மண்ணில் கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளது, இந்திய அணி.
முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து முன்னிலை பெற்றநிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கியது.
எனினும் இந்திய பந்துவீச்சார்களின் அதிரடி ஆட்டத்தில், இங்கிலாந்து, 53.5 ஓவர்களில் 145 ரன்களை பெற்று ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்சில், ஷுப்மன் கில், அறிமுக வீரர் துருவ் ஜூரெல் இருவரும், ஆட்டத்தை வெற்றிபாதை நோக்கி திருப்பி, இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாயினர்.
ஐபிஎல்
ஐபிஎல் போட்டியை பெங்களூரு அணி வெல்ல வேண்டும்: சுரேஷ் ரெய்னா
நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியை பெங்களூரு அணி வெல்ல வேண்டும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
நொய்டாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் பொது நிருபர்களிடம் பேசிய அவர், "ஐ.பி.எல். போட்டியில் இந்த முறை விராட்கோலியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்".
"அவர்கள் நீண்டகாலமாக கோப்பையை வெல்லாமல் உள்ளனர். கடந்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது. ஆனால் இந்த ஆண்டு கோப்பையை ஒருமுறையும் கைப்பற்றாத பெங்களூரு அணி மகுடம் சூடும் என்று நம்புகிறேன்".
"விராட் கோலி உண்மையிலேயே கடுமையாக உழைத்துள்ளார். அவர் இந்த முறை கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
கபடி
ப்ரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ் அரையிறுதிக்கு தகுதி
கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி ஆமதாபாத்தில் தொடங்கிய 10-வது புரோ கபடி லீக் போட்டியின் முதலாவது எலிமினேட்டர் ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றன.
அதை தொடர்ந்து நேற்று பிளே - ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்கின.
முதல் போட்டி தெலுங்கானாவில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
அதில், தபாங் டெல்லி அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் 37-35 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் போட்டியை வென்றது.
தொடர்ந்து நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.
ராஞ்சி போட்டி
அரசியல் தலையீடு இருக்கிறது என இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி குற்றசாட்டு
ஆந்திர கிரிக்கெட் அணிக்காக இனி விளையாட மாட்டேன் என்றும், அரசியல் தலையீடு காரணமாக இந்த முடிவை எடுப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி அறிவித்துள்ளார்.
இதனை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை சீசனின் காலிறுதிப் போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது ஆந்திர அணி.
ஆரம்பத்தில் ஆந்திர அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார் விஹாரி.
ஆனால் முதல் போட்டிக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்த சூழலில் தான் அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்