NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 03, 2023
    09:30 am

    செய்தி முன்னோட்டம்

    புரோ கபடி லீக் 10வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 2) தெலுங்கு டைட்டன்ஸை எதிர்கொண்ட குஜராத் ஜெயன்ட்ஸ் த்ரில் வெற்றி பெற்று போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

    இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பவன் செஹ்ராவத் சூப்பர் 10 ஐப் பெற்றாலும், ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் அந்த அணி மோசமான தவறுகளை செய்தது.

    போட்டியின் இரண்டாவது பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சோனு 11 புள்ளிகளைப் பெற்று, குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை முன்னிலை பெறச் செய்த நிலையில், இறுதியில் குஜராத் 38-32 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

    PKL 10 : U Mumba beats UP Yoddhas in narrow margin

    புரோ கபடி லீக் : உபி யோதாஸ் அணியை வீழ்த்தி யு மும்பா த்ரில் வெற்றி

    புரோ கபடி லீக் 10வது சீசனின் முதல் நாளில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 2) உபி யோதாஸ் அணியை எதிர்கொண்ட யு மும்பா போராடி வென்றது.

    10வது சீசனில் யு மும்பா தனது முதல் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் அறிமுகமாகி வீரராக களமிறங்கிய அமீர்முகமது ஜாபர்தானேஷ் யு மும்பா அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.

    மேலும், அந்த அணியின் கேப்டன் சுரிந்தர் சிங்கின் ஆதரவோடு, சில தரமான தடுப்பாட்டங்களுடன் டிஃபெண்டெர் ரிங்கு போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.

    Indian Super League 2023-24 Mohun Bagan beats Hyderabad FC

    ஐஎஸ்எல் கோப்பை 2023-24 : ஹைதராபாத் எஃப்சியை வீழ்த்தி வரலாறு படைத்த மோஹுன் பாகன் எஸ்ஜி

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கோப்பை 2023-24 தொடரில் இதுவரை தோல்வியையே கண்டிராத மோஹுன் பாகன் எஸ்ஜி கால்பந்து அணி, சனிக்கிழமை (டிசம்பர் 2) அன்று கலிங்கா ஸ்டேடியத்தில் ஹைதராபாத் எஃப்சி அணிக்கு எதிராக வெற்றி பெற்றது.

    ஹைதராபாத் எஃப்சி வலுவாகத் தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மோஹுன் பாகன் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர்.

    இதன் மூலம், இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மோஹுன் பாகன் ஹைதராபாத் எஃப்சியை வீழ்த்தியது.

    மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்று வேறு எந்த அணியும் செய்யாத சாதனை படைத்துள்ளது.

    Elavenil Valarivan wins gold in National Archery Championship

    தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

    டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்ற 66வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் (என்எஸ்சிசி) இறுதி நாளில் ஒலிம்பிக் வீராங்கனை இளவேனில் வாலறிவன் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார்.

    எட்டு பேர் இறுதிப்போட்டியில் போட்டியிட்ட நிலையில், இரண்டாவது இடத்தை பிடித்த ஹரியானாவின் ரமிதா ஜிண்டாலை விட 0.9 புள்ளிகள் கூடுதலாக பெற்று தங்கம் வென்றார்.

    ரமிதாவின் சக ஹரியானா வீராங்கனை நான்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

    இதற்கிடையே ஜூனியர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா தங்கப் பதக்கத்தையும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கவுதமி பானோட் இளையோர் தங்கப் பதக்கத்தையும் வென்றனர். விரிவாக படிக்க

    Bangladesh beats Newzealand in First Test

    நியூசிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்டில் வங்கதேச கிரிக்கெட் அணி வெற்றி

    சில்ஹெட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேச கிரிக்கெட் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 310 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 317 ரன்கள் குவித்து 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 338 ரன்கள் குவித்ததை அடுத்து 332 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

    ஆனால், வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். விரிவாக படிக்க

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புரோ கபடி லீக்
    குஜராத் ஜெயன்ட்ஸ்
    இந்தியன் சூப்பர் லீக்

    சமீபத்திய

    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை
    டெஸ்லாவின் இந்தியா பிரிவு தலைவர் பிரசாந்த் மேனன் திடீர் ராஜினாமா; காரணம் என்ன? டெஸ்லா
    இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது மத்திய அரசு
    நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல் இந்தியா

    புரோ கபடி லீக்

    புரோ கபடி லீக் சீசன் 10க்கான வீரர்கள் ஏல தேதி அறிவிப்பு கபடி போட்டி
    டிசம்பர் 2 முதல் தொடங்குகிறது பத்தாவது புரோ கபடி லீக் கபடி போட்டி
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைப்பு ஆசிய விளையாட்டுப் போட்டி
    புரோ கபடி லீக் சீசன் 10க்கான புதுப்பிக்கப்பட்ட ஏல தேதி அறிவிப்பு கபடி போட்டி

    குஜராத் ஜெயன்ட்ஸ்

    PKL Season 10 : 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் 10வது சீசன் இன்று தொடக்கம் புரோ கபடி லீக்
    புரோ கபடி லீக் : குஜராத் ஜெயன்ட்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் புரோ கபடி லீக்

    இந்தியன் சூப்பர் லீக்

    Sports RoundUp: உலகக்கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா; ஐஎஸ்எல் லீக்கில் பஞ்சாபை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025