Page Loader
தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்
தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 02, 2023
07:55 pm

செய்தி முன்னோட்டம்

புதுதில்லியில் உள்ள துக்ளகாபாத் டாக்டர் கர்னி சிங் ரேஞ்சில் சனிக்கிழமை (டிசம்பர் 2) நடைபெற்ற 66வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். 24 வயதான இளவேனில் ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற ரமிதா ஜிண்டாலை விட 0.9 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடம் பிடித்தார். ரமிதா ஜிண்டால் வெள்ளி வென்ற நிலையில், நான்சி உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற மெஹுலி கோஷை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதற்கிடையே ரமிதா ஜிண்டால் 2.2 புள்ளிகள் வித்தியாசத்தில் திஷாவை வீழ்த்தி ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றார். கவுதமி பானோட் இதில் வெண்கலம் வென்றார்.

ட்விட்டர் அஞ்சல்

இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்