NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 31, 2023
    07:30 am

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்.30) நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாதும் நிசங்க 46 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஃபசல்ஹாக் ஃபரூக்கி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தொடர்ந்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில், இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    அந்த அணியில் ரஹ்மத் ஷா, ஹசமதுல்லா ஷாஹிதி மற்றும் அசமதுல்லா ஒமர்சாய் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    Lionel Messi won Ballon d'Or Award for the eighth time

    எட்டாவது முறையாக பலோன் டி'ஓர் விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி

    பிரான்ஸ் கால்பந்து இதழால் 1956 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆண்களுக்கு பலோன் டி'ஓர் விருதை எட்டாவது முறையாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

    லியோனல் மெஸ்ஸி இதுவரை எட்டு முறை பலோன் டி'ஓர் விருதை வென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.

    திங்கட்கிழமை பாரிஸில் உள்ள தியேட்டர் டு சாட்லெட்டில் தனது எட்டாவது விருதை பெற்று கோப்பையுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    முன்னதாக, மெஸ்ஸி தனது முதல் பலோன் டி'ஓர் விருதை 14 ஆண்டுகளுக்கு முன்பு 2009இல் வென்றார்.

    இதன் மூலம் பலோன் டி'ஓர் விருதை வென்ற முதல் அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    India women Hockey Team beats China in ACT 2023

    மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் சீனாவை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் திங்கட்கிழமை நடைபெற்ற மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது.

    போட்டியின் முதல் பாதியில் தீபிகா (15') மற்றும் சலிமா டெட் (26') ஆகியோர் இந்தியாவுக்காக கோல் அடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தனர்.

    மேலும், இரண்டாவது பாதியில் இந்தியா கோல் எதுவும் அடிக்காத நிலையில், சீனாவின் ஜோங் ஜியாகி (41') கடுமையாக போராடி அந்த அணிக்கு ஒரு கோலை பெற்றுக் கொடுத்தார்.

    இதன் மூலம், இந்தியா தற்போதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

    இதன்மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

    Famous Srilanka Cricket Fan Uncle Percy Abeysekara passed away

    பிரபல இலங்கை கிரிக்கெட் ரசிகர் பேர்சி அபேசேகர காலமானார்

    இலங்கை நாட்டு கொடியை ஏந்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்று பிரபலமான அந்நாட்டு ரசிகர் பேர்சி அபேசேகர, நீண்டகால நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில், திங்களன்று காலமானார்.

    87 வயதான அபேசேகர, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களால் அங்கிள் பெர்சி என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

    அவர் தனது நாடு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் எங்கெல்லாம் விளையாடுகிறதோ அங்கெல்லாம் தொடர்ந்து நேரில் சென்று பார்த்த வண்ணம் இருந்தார்.

    வண்ணமயமான ஆடை அணிவதற்காக அறியப்பட்ட அபேசேகர, 1979 உலகக்கோப்பையில் இருந்து இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் இந்த பயணத்தை தொடங்கி செய்து வந்தார்.

    உடல்நலக்குறைவால் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பையில் அவர் பங்கேற்காமல் இருந்த நிலையில், தற்போது காலமாகியுள்ளார்.

    Inzamam-ul-Haq resigned from Pakistan Cricket selection committee

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் ராஜினாமா

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து இன்சமாம் உல் ஹக் திங்களன்று ராஜினாமா செய்தார்.

    மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தக விளம்பரங்களுக்காக பல பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்தில் ஆதாயம் பெறும் பதவி வகித்ததாக இன்சமாம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்த கையோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இன்சமாம் தெரிவித்துள்ளார்.

    மேலும், பாகிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த இன்சமாம், இந்தக் குற்றச்சாட்டுக்களால் தான் மனம் உடைந்துள்ளேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    ஆப்கான் கிரிக்கெட் அணி
    லியோனல் மெஸ்ஸி
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஒருநாள் உலகக்கோப்பை

    ஒருநாள் உலகக்கோப்பை: 149 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா  தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு பாபர் அசாமை பந்தாடிய முன்னாள் பாக். வீரர்கள் பாகிஸ்தான்
    AUS vs NED: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
    AUS vs NED: நெதர்லாந்து அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட்

    ஆப்கான் கிரிக்கெட் அணி

    ஆப்கானிஸ்தான்-வங்கதேச கிரிக்கெட் தொடர் போட்டிகள் குறைப்பு! காரணம் இது தான்! வங்கதேச கிரிக்கெட் அணி
    காயம் காரணமாக ரஷீத் கான் நீக்கம்! இலங்கை தொடருக்கான ஆப்கான் அணிக்கு பின்னடைவு! இலங்கை கிரிக்கெட் அணி
    SL vs AFG முதல் ஒருநாள் போட்டி : 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி! ஒருநாள் கிரிக்கெட்
    ஆப்கான் கிரிக்கெட் தொடர் செப்டெம்பருக்கு ஒத்திவைக்க பிசிசிஐ திட்டம்! கிரிக்கெட்

    லியோனல் மெஸ்ஸி

    பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகுகிறார் லியோனல் மெஸ்ஸி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கால்பந்து
    மீண்டும் பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்பும் லியோனல் மெஸ்ஸி! கால்பந்து
    இன்டர் மியாமி அணியில் மெஸ்ஸி சேர உள்ளதாக தகவல்! மேஜர் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு! கால்பந்து
    விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி சீனா

    கால்பந்து செய்திகள்

    பிபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றி; வரலாறு படைத்த பிலிப்பைன்ஸ் கால்பந்து
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி கால்பந்து
    சவூதி புரோ லீக்கிற்கு இடம் பெயர்ந்த மான்செஸ்டர் சிட்டி கிளப் வீரர் கால்பந்து
    ஜாம்பவான் மரடோனாவின் ஜெர்சியை அணிந்த லியோனல் மெஸ்ஸி; வைரலாகும் காணொளி லியோனல் மெஸ்ஸி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025