Loading...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை எழுதிய உருக்கமான கடிதம், 10 வருட உழைப்பு: யார் இந்த சரான்ஷ் ஜெயின்?
இந்திய டெஸ்ட் அணியில் தனது முதல் வாய்ப்பைப் பெற்றுள்ளார் சரான்ஷ் ஜெயின்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை எழுதிய உருக்கமான கடிதம், 10 வருட உழைப்பு: யார் இந்த சரான்ஷ் ஜெயின்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 28, 2026
12:27 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் சரான்ஷ் ஜெயின், இந்திய டெஸ்ட் அணியில் தனது முதல் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஆகஸ்ட் 15 முதல் இலங்கைக்கு எதிராக தொடங்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஞ்சி கோப்பையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி வந்த சரான்ஷ்க்கு இந்த வாய்ப்பு ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகும். ஐபிஎல் தொடர்கள் மூலம் பல வீரர்கள் எளிதில் இந்திய அணிக்கு தேர்வாகும் இந்தக் காலத்தில், முற்றிலும் உள்நாட்டுப் போட்டிகளில் காட்டிய திறமையின் அடிப்படையில் மட்டுமே இவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

பின்னணி

உணர்ச்சிப்பூர்வமான பின்னணி

கிரிக்கெட்டில் தனது கவனம் சிதறக் கூடாது என்பதற்காக, 2014-இல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தனது தந்தைக்கு ஏற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சை குறித்து இவரிடம் குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை.

இந்தியா திரும்பிய பிறகு அவரது தந்தை, "மகனே, நான் நலமாக உள்ளேன். நீ இன்னும் சிறப்பாக விளையாடினால் நான் விரைவில் குணமடைவேன்" என்று ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார்.

அவரது தந்தையும் முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிவிவரங்கள்

அசத்தல் புள்ளிவிவரங்கள்

54 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள சரான்ஷ் ஜெயின், 31.75 சராசரியுடன் 2,223 ரன்களையும், 27.30 சராசரியுடன் 188 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2025-26 ரஞ்சி கோப்பைத் தொடரில் மத்தியப் பிரதேச அணிக்காக 7 போட்டிகளில் 518 ரன்கள் குவித்ததுடன், 30 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு மிக முக்கிய தூணாக செயல்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற 'இந்தியா ஏ' அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தில் சிறப்பாகச் செயல்பட்ட இவர், தற்போது இந்திய முதன்மை அணியிலும் தடம் பதித்துத் தனது நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளார்.

ADVERTISEMENT