IPL 2027-க்கு முன்பாக 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் கையிருப்புத் தொகையின் முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
IPL 2027 ஏலத்திற்கு முன்பாக, அனைத்து 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்களின் இறுதிப் பட்டியலை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஓய்வு பெற்று அணியின் 'மென்டர்' ஆக மாறியுள்ள நிலையில், டிராவிஸ் ஹெட், டிரென்ட் போல்ட், மிட்செல் ஸ்டார்க், வனிந்து ஹசரங்கா, மதீஷா பதிரனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் ஏலத்திற்கான கையிருப்புத் தொகையின் முழு விவரம் இதோ:
கையிருப்புத் தொகை
10 அணிகளின் கையிருப்புத் தொகை ஒப்பீடு
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ₹47.45 கோடி (அதிகபட்சம்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ₹41.65 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ₹40.15 கோடி
டெல்லி கேபிடல்ஸ் ₹39.50 கோடி
மும்பை இந்தியன்ஸ் ₹32.60 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் ₹28.05 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் ₹27.05 கோடி
பஞ்சாப் கிங்ஸ் ₹18.60 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ₹14.15 கோடி
குஜராத் டைட்டன்ஸ் ₹8.75 கோடி (குறைந்தபட்சம்)
விடுவிக்கப்பட்ட வீரர்கள் #1
அணி வாரியாக விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல்
சென்னை சூப்பர் கிங்ஸ்(10): எம்.எஸ். தோனி (ஓய்வு -மென்டராக நியமனம்), பிரசாந்த் வீர் (₹14.20 கோடிக்கு வாங்கப்பட்டவர்), மேத்யூ ஷார்ட், மேட் ஹென்றி, சாக் ஃபவுல்க்ஸ், அமன் கான், குல்தீப் யாதவ், ஆகாஷ் மத்வால், டயான் ஃபாரெஸ்டர், மேக்நீல் நோரோன்ஹா.
மும்பை இந்தியன்ஸ்(9): டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், அல்லா கசன்பர், அதர்வா அங்கோலேகர், கேசவ் மகாராஜ், முகமது இஸ்ஹார், டேனிஷ் மாலேவார், மயங்க் மார்கண்டே, மயங்க் ராவத்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(12): அஜிங்க்யா ரஹானே (கேப்டன் - ஐபிஎல் ஓய்வு), ஆகாஷ் தீப், பிளெஸ்ஸிங் முசரபானி, தக்ஷ் கம்ரா, லுவ்னித் சிசோடியா, மதீஷா பதிரனா, முஸ்தபிசுர் ரஹ்மான், நவ்தீப் சைனி, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, தேஜஸ்வி சிங், உம்ரான் மாலிக்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் #2
அணி வாரியாக விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(5): ஜேக்கப் பெத்தேல், ரிச்சர்ட் க்ளீசன், மங்கேஷ் யாதவ், சாத்விக் தேஸ்வால், விஹான் மல்ஹோத்ரா.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்(7): மேத்யூ பிரீட்ஸ்கே, அன்ரிச் நார்ட்ஜே, ஜார்ஜ் லிண்டே, வனிந்து ஹசரங்கா, நமன் திவாரி, அர்ஷின் குல்கர்னி, ஆவேஷ் கான்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(9): டிராவிஸ் ஹெட், கமிந்து மெண்டிஸ், ஜெய்தேவ் உனத்கட், தில்ஷன் மதுஷங்கா, ஓம்கார் தர்மாலே, அமித் குமார், சிவம் மாவி, ஜெரால்ட் கோட்ஸி, டேவிட் பெய்ன்.
டெல்லி கேபிடல்ஸ்(10): மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலிய சர்வதேசப் போட்டிகளில் கவனம் செலுத்த விலகல்), நிதிஷ் ராணா, அபிஷேக் போரல், பதும் நிசங்கா, பென் டக்கெட், கருண் நாயர், சாஹில் பராக், துஷ்மந்த சமீரா, ரெஹான் அகமது, அஜய் மண்டல்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் #3
அணி வாரியாக விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல்
ராஜஸ்தான் ராயல்ஸ் (8): ஷிம்ரான் ஹெட்மயர், ஆடம் மில்னே, குவேனா மபாகா, துஷார் தேஷ்பாண்டே, குல்தீப் சென், யுத்வீர் சிங், விக்னேஷ் புதூர், ரவி சிங்.
பஞ்சாப் கிங்ஸ் (6): லாக்கி பெர்குசன், மிட்ச் ஓவன், நேஹல் வதேரா, பைலா அவினாஷ், பிரவீன் துபே, விஷால் நிஷாத்.
குஜராத் டைட்டன்ஸ் (5): இஷாந்த் சர்மா, மார்க் வுட், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷாருக்கான், கானர் எஸ்டெர்ஹுய்சென்.