கோலி காட்டிய சிக்னல்.. அடுத்த பந்தே அவுட்! ஹாசல்வுட் மேஜிக்கால் நிலைகுலைந்த டெல்லி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல்-2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) மற்றும் டெல்லி கேபிடல்ஸ்(DC) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், விராட் கோலி மற்றும் ஜோஷ் ஹாசல்வுட் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. கே.எல். ராகுலின் விக்கெட்டை வீழ்த்த கோலி கொடுத்த 'சிக்னல்' தான் காரணமோ என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். வைரலான அந்த வீடியோவில், ஹாசல்வுட் பந்துவீசுவதற்கு சில நொடிகள் முன்பு, கோலி பிட்ச்சின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கிச் சைகை காட்டுகிறார். கோலி சைகை காட்டிய அடுத்த பந்திலேயே, ஹாசல்வுட் வீசிய துல்லியமான பந்தில் கே.எல்.ராகுல் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுலைத் தொடர்ந்து வந்த சமீர் ரிஸ்வியையும் அதே ஓவரின் அடுத்த பந்திலேயே(Golden Duck) ஹாசல்வுட் வீழ்த்தி அசத்தினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Josh Hazlewood being so 𝙂𝙤𝙤𝙙 👌
— IndianPremierLeague (@IPL) April 27, 2026
🎥 The #RCB seamer starts his spell sending back KL Rahul and Sameer Rizvi 😮
Updates ▶️ https://t.co/HIiNNEutP0#TATAIPL | #KhelBindaas | #DCvRCB | @RCBTweets pic.twitter.com/OSMRlv07PX
மோசமான சாதனை
டெல்லி அணி படைத்த மோசமான சாதனை
ஹாசல்வுட் மற்றும் புவனேஷ்வர் குமாரின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி கேபிடல்ஸ் அணி முன்னெப்போதும் இல்லாத ஒரு சரிவைச் சந்தித்தது. பவர்பிளே ஓவர்களில் டெல்லி அணி வெறும் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே பவர்பிளே ஓவர்களில் ஒரு அணி எடுத்த மிகக்குறைந்த ஸ்கோர் ஆகும். ராகுல் மற்றும் ரிஸ்வி ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே ஆர்சிபி பக்கம் திருப்பினார் ஹாசல்வுட்.
விவாதம்
ரசிகர்களின் விவாதம்
கோலியின் கிரிக்கெட் அறிவு மற்றும் தந்திரோபாயங்களைச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். "கோலி களத்தில் இருந்தால் அவர் ஒரு கேப்டனைப் போலவே செயல்படுகிறார்" என ஒரு தரப்பினர் கூற, மற்றொரு தரப்பினர் இது தற்செயலாக நடந்த நிகழ்வு எனத் தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, இந்தத் தருணம் ஐபிஎல் 2026-இன் மறக்க முடியாத விவாதப் பொருளாக மாறியுள்ளது.