Page Loader
ஐபிஎல் 2024: CSK vs RR போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை
CSK vs RR போட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் மே 12-ஆம் தேதி நடைபெறும்

ஐபிஎல் 2024: CSK vs RR போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2024
11:07 am

செய்தி முன்னோட்டம்

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி 20 தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் 12-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னையில் மோதவிருக்கின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (மே 9-ஆம் தேதி) காலை 10.40 மணிக்கு இணையதளம் வாயிலாக தொடங்கும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. Paytm மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, டிக்கெட் விலை ரூ.1,700 தொடங்கி, ரூ.6 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

embed

 சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் விற்பனை

#NewsUpdates | RR vs CSK: மே 12 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற மே 9 ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவிப்பு#WinNews| #Cricket #Chennai #CSK #RR #Ticket #CSKVSRR #IPL #ChennaiSuperKings #RajasthanRoyals pic.twitter.com/cGsbxBx1SC— Win News Prime (@winnewstamil) May 7, 2024