
சச்சின் முதல் மேக்ஸ்வெல் வரை : ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த வீரர்கள் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ரன்களை விளாசினார்.
முன்னதாக, 292 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய தொடங்கிய ஆஸ்திரேலியா ஒருகட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், பாட் கம்மின்சுடன் சேர்ந்து கிளென் மேக்ஸ்வெல் அணியின் இலக்கை எட்டி வெற்றி பெறச் செய்தார்.
இந்த இரட்டை சதம் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார்.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தவர்களின் சாதனைகளை இதில் பார்க்கலாம்.
Glenn Maxwell only double centurion while chasing in ODI
கிளென் மேக்ஸ்வெல் - ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங் செய்தபோது இரட்டை சதம் அடித்த ஒரே வீரர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 292 ரன்களை சேஸ் செய்தபோது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 91/7 என தத்தளித்த நிலையில், தனியொரு ஆளாக 201* ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் பல வீரர்கள் இரட்டை சதம் விளாசி இருந்தாலும், சேஸிங்கில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் அல்லாத ஒரே வீரரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மேக்ஸ்வெல் இந்திய ஜாம்பவான் கபில்தேவின் சாதனையையும் முறியடித்தார்.
அவர் இதற்கு முன்பு ஆறாவது அல்லது அதற்கும் கீழே ஒரு நாள் போட்டிகளில் களமிறங்கி அதிக தனிநபர் ஸ்கோரை வைத்திருந்தார்.
Sachin Tendulkar first double centurion in ODI
சச்சின் டெண்டுல்கர் - ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர்
கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர்தான் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் போக்கை முதன்முதலில் தொடங்கி வைத்தார்.
பிப்ரவரி 2010 இல், சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதத்தை அடித்தார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக குவாலியரில் நடந்த இந்த போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 401/3 ரன்களை எடுத்தது, டெண்டுல்கர் 147 பந்துகளில் 200* அடித்தார்.
அவர் 25 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாச, இந்திய கிரிக்கெட் அணி இந்த போட்டியில் 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Virender Sehwag made record with double century after Sachin Tendulkar
வீரேந்திர சேவாக் - கேப்டனாக அதிகபட்ச தனிநபர் ஒருநாள் ஸ்கோர்
டெண்டுல்கரின் நீண்ட நாள் தொடக்க கூட்டாளியான வீரேந்திர சேவாக், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் ஆவார்.
சச்சின் இரட்டை சதம் அடித்த பிறகு, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து சேவாக் இரட்டை சதம் அடித்ததோடு, சச்சினின் சாதனையையும் முறியடித்தார்.
2011 டிசம்பரில் இந்தூரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சேவாக் 149 பந்துகளில் 219 ரன்கள் குவித்தார்.
அந்த போட்டியில் அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இதை சேவாக் தற்போதுவரை தக்கவைத்துள்ளார்.
Rohit Sharma more than one double century in ODI
ரோஹித் ஷர்மா - ஒருநாள் போட்டிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டை சதம் அடித்த முதல் வீரர்
தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா, 2013ல் ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது இரட்டை சதம் அடித்தார்.
பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை விளாசினார். மேலும், ஒரு வருடம் கழித்து, கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக ரோஹித் 173 பந்துகளில் 264 ரன்கள் எடுத்தார்.
இது ஒருநாள் போட்டிகளில் அதிக தனிநபர் ஸ்கோராக இருந்தது. மேலும், இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டை சதங்கள் அடித்த முதல் பேட்டர் ஆனார்.
தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 2017 இல் மொஹாலியில் இலங்கைக்கு எதிராக 208* எடுத்து மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
Double Centurions in ODI World Cups
கிறிஸ் கெய்ல், மார்ட்டின் கப்தில் - ஒருநாள் உலகக்கோப்பையில் இரட்டை சதம்
2015 ஆம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஆனார்.
அவர் ஜிம்பாப்வேக்கு எதிராக 147 பந்துகளில் 215 ரன்கள் குவித்தார். அதே தொடரில், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 237 ரன்களை எடுத்தார்.
இது இன்றுவரை ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.
இந்நிலையில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை சீசனில் மூன்றாவது வீரராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
Other double centuries in ODI
இரட்டை சதம் அடித்த இதர வீரர்கள்
2018 ஆம் ஆண்டில், ஃபக்கர் ஜமான் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானின் ஒரே இரட்டைச் சதம் அடித்தார். அவர் ஜிம்பாப்வேக்கு எதிராக 156 பந்துகளில் 210* ரன்கள் எடுத்தார்.
2022 இல், இந்தியாவின் இஷான் கிஷன் சட்டோகிராமில் வங்கதேசத்திற்கு எதிராக 210 ரன்கள் எடுத்தார். 24 ஆண்டுகள் மற்றும் 145 நாட்களில், ஆடவர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இளையவர் என்ற பெருமையை அவர் இதன்மூலம் பெற்றார்.
எனினும், ஒரு மாதத்திற்குப் பிறகு, ஷுப்மன் கில் நியூசிலாந்திற்கு எதிராக 208 ரன்களை விளாசினார்.
அவர் 23 ஆண்டுகள் மற்றும் 132 நாட்களில் இந்த சாதனையை செய்து ஷுப்மன் கில்லின் சாதனையை முறியடித்தார்.