
உலக கோப்பை புள்ளி பட்டியல்-பரிதாப நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து
செய்தி முன்னோட்டம்
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றது மூலம், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தோல்வியின் மூலம், அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி ஏறக்குறைய இழந்துவிட்டது. விளையாடிய 5 போட்டிகளில் ஐந்திலும், வெற்றி பெற்று புள்ளி பட்டியலில், இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் தலா 8 புள்ளிகளுடன், முறையே தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன. தொடர்ந்து மூன்று போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணி, புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. லீக் சுற்றில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
2nd card
இங்கிலாந்து அணி சறுக்கியதற்கு என்ன காரணம்?
உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகளில் இங்கிலாந்தும் இடம்பெறும் என பல கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்தனர். தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. பின்னர் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வென்றாலும், முறையே ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கையிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்தின் இத்தோல்விக்கு, நட்சத்திர வீரர்கள் ஃபார்மில் இல்லாதது, கடைசி நேரத்தில் ஜெசன் ராய்க்கு பதிலாக ஹரி ப்ரூக் சேர்க்கப்பட்டது, ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்சை அழைத்து வந்து விளையாட வைத்தது காரணமாக சொல்லப்படுகிறது. அதே சமயம், இங்கிலாந்து ஜோப்ரா ஆர்ச்சர், டாப்லி உள்ளிட்ட தனது முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் விளையாடிவருவதும் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
புள்ளி பட்டியல்- நேற்றைய இங்கிலாந்து இலங்கையை இடையேயான போட்டி வரை
Sri Lanka have joined the race for a spot in the #CWC23 semi-final 🏆 pic.twitter.com/w1iaiEejRV
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 27, 2023