Loading...
ஏஐ உங்கள் வேலையைப் பறித்தால் வீடியோ கேம் விளையாடுங்கள்; ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடியின் வினோத யோசனை
ஏஐ ஆட்குறைப்பால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடியின் வினோத யோசனை

ஏஐ உங்கள் வேலையைப் பறித்தால் வீடியோ கேம் விளையாடுங்கள்; ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடியின் வினோத யோசனை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2026
04:50 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மனிதர்களின் வேலைகளை எடுத்துக் கொண்டால் கோடிக்கணக்கான மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடி இதற்கு ஒரு வினோதமான யோசனையை முன்பு முன்வைத்துள்ளார். ஓபன்ஏஐ நிறுவனத்தில் பணியாற்றியபோது பகிரப்பட்ட ஸ்லாக் செய்திகளில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலையின்மையால் உருவாகும் கொந்தளிப்பைத் தணிக்க ஆழ்ந்த வீடியோ கேம்கள் உதவக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலை என்பது வருமானம் மட்டுமல்ல

வாழ்க்கையின் நோக்கமும் சமூகப் பிணைப்பும் கொண்டது

டாரியோ அமோடி கருத்துப்படி, வீடியோ கேம் விளையாடுவது ஒரு அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் காட்சி போலத் தோன்றலாம்.

ஆனால் இதன் பின்னணியில் ஒரு தீவிரமான சமூகக் கவலை அடங்கியுள்ளது.

வேலை என்பது மக்களுக்கு வெறும் பணம் சம்பாதிக்கும் வழி மட்டுமல்ல.

அது தினசரி ஒழுங்கு, சமூகத் தொடர்புகள் மற்றும் வாழ்க்கையின் நோக்கத்தையும் வழங்குகிறது.

புதிய வாய்ப்புகள் உருவாவதற்கு முன்பே செயற்கை நுண்ணறிவு வேலைச் சந்தையை வேகமாக மாற்றினால் சமூகங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

வேலை இழப்பு நிலவரம்

ILO மற்றும் OECD 2026 அறிக்கைகளின்படி ஏஐ வேலை இழப்பு குறித்த தற்போதைய உண்மை நிலவரம்

பெரிய அளவிலான வேலை இழப்புகள் குறித்த அச்சம் அதிகரித்து வந்தாலும் தற்போதைய நிலவரம் சற்று வேறுபட்டதாக உள்ளது.

ஜெனரேட்டிவ் ஏஐ காரணமாக பெரிய அளவிலான வேலை இடப்பெயர்வு இதுவரை குறைவாகவே உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஜூன் 2026 ஆய்வு கூறுகிறது.

இருப்பினும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக் குறைவு ஆகியவை முக்கிய அபாயங்களாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இளம் தொழிலாளர்கள் மீது பெரிய மொழி மாதிரிகளின் தாக்கம் இதுவரை குறைவாகவே உள்ளதாக OECD 2026 வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பங்குகள் நன்கொடை

ஆந்த்ரோபிக்கின் நாஸ்டாக் ஐபிஓ சாதனையும் 80% பங்குகளை நன்கொடையாக வழங்கும் உறுதிமொழியும்

சமீபத்தில் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஆந்த்ரோபிக் நிறுவனம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

167 ஆண்டு காலப் பழமையான ரீமான் கருதுகோள் கணிதப் புதிருக்கு கிளாட் ஏஐ உதவியுடன் அந்நிறுவனம் தீர்வு கண்டுள்ளது.

டாரியோ அமோடி, அவரது சகோதரி டேனியலா அமோடி மற்றும் ஐந்து இணை நிறுவனர்கள் முக்கிய உறுதிமொழி ஒன்றை எடுத்துள்ளனர்.

அதன்படி தங்களது தனிப்பட்ட பங்குகளில் 80 சதவீதத்தைத் தொண்டு பணிகளுக்கு அர்ப்பணிக்க அவர்கள் முன்வந்துள்ளனர்.

ADVERTISEMENT