விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் எப்படி இருக்கும்? நாசா பகிர்ந்துள்ள வீடியோ
நேற்று ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் ஒரு வரலாற்று வான நிகழ்வாகும். ஏனெனில் இது ஆகஸ்ட் 2044 வரை அமெரிக்கா முழுவதும் மீண்டும் காணப்படாது. திங்களன்று மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த அரிய முழு சூரிய கிரகணத்தை கண்டுகளித்தனர். சூரிய கிரகணத்தைக் காண நாசா தனது யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பை பகிர்ந்தது. சூரிய கிரகணம் நடைபெற்ற பாதையில், வெப்பநிலை சுமார் 10 டிகிரி குறைந்தது. இந்தநிலையில், விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் பார்ப்பதற்கு எப்படி இருந்தது என்பதையும் நாசா வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல, எலான் மஸ்க்கும் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம், பதிவான சூரியகிரகண வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சூரிய கிரகணம்
View of the eclipse from orbit pic.twitter.com/2jQGNhPf2v— Elon Musk (@elonmusk) April 9, 2024
விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம்
Ever seen a total solar #eclipse from space? Here is our astronauts' view from the @Space_Station pic.twitter.com/2VrZ3Y1Fqz— NASA (@NASA) April 8, 2024