இந்தியா மற்றும் கனடாவில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்
நல்ல இரவு தூக்கம் மிகவும் ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். கூடுதலாக, பல ஆய்வுகள், தரமான தூக்கம் (7-9 மணிநேரம்) உங்கள் அறிவாற்றல், மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் காட்டுகிறது. ஆனால் தற்போது இருக்கும் பரபரப்பான உலகில், பலருக்கும் படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்துவிடுவதில்லை. சிலர் மருத்துவர் உதவியை நாடுவதுண்டு. ஒரு சிலர் தங்கள் மூதாதையர்கள் சொல்வதை கேட்டு, பண்டைய வழக்கங்களை கடைபிடிப்பதுண்டு சுவாரசியமாக, இந்த வழக்கங்கள் மருத்துவ உலகில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அப்படி உலகின் ஓவ்வொரு நாட்டிலும் கடைபிடிக்கப்படும் உத்திகளை இந்த பகுதியில் பார்க்கலாம். ஜப்பானில் எப்படி தூங்குகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆசையா?
கனடியர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் தூங்குகிறார்கள்
ஒரு மனிதனின் மன இறுக்கத்தை போக்குவதற்கு, ஆறுதலுக்கு, நிச்சயமாக, கட்டிப்பிடிக்க யாராவது தேவை. மனிதர்கள் இல்லையென்றால், செல்லப்பிராணிகளை ஏன் கட்டியணைக்க கூடாது என்பது கனடா மக்களின் கேள்வி. ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு கனேடியர்கள், தங்கள் செல்லப்பிராணிகளை அவர்கள் வசதியாக உறங்க உடன் அழைத்து செல்கிறார்கள். இருப்பினும், வல்லுநர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் தூங்குவதை பெரிதாக பரிந்துரைப்பதில்லை. காரணம், அது உங்கள் தூக்க சுழற்சியை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், உங்கள் செல்லப்பிராணியின் உடலில் இருந்து நிறைய பாக்டீரியாக்கள் தொற்றுகள் பரவக்கூடும் என்பதால், இது மிகவும் சுகாதாரமான யோசனை இல்லை என கருதுகிறார்கள்
சூடான உணவு: இந்தியர்களின் தேர்வு
பெரும்பாலான இந்தியர்கள் படுக்கைக்கு முன் சூடாக ஏதாவது சாப்பிட விரும்புகிறார்கள். நம்மிடம் தூக்கத்திற்கென பெரிதாக பண்டைய வழக்கம் இல்லை. இருப்பினும், நம் நாட்டவர்கள் பொதுவாக தூங்குவதற்கு முன் இரண்டு செயல்களில் ஈடுபடுவார்கள். ஒன்று, பிரார்த்தனை மற்றொன்று, சிறிது சூடான பால் பருகுவது. தூங்குவதற்கு முன் பிரார்த்தனை அல்லது தியானம் செய்வது, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும், விரைவாக தூங்குவதற்கு உதவும். படுக்கைக்கு முன் பால் குடிப்பதைப் பொறுத்தவரை, பாலில் உள்ள டிரிப்டோபன் மற்றும் மெலடோனின்: அவை தூக்கத்தை ஊக்குவிக்கும் அமினோ அமிலங்கள்.