ஜப்பானில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்
நல்ல இரவு தூக்கம் மிகவும் ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். கூடுதலாக, பல ஆய்வுகள், தரமான தூக்கம் (7-9 மணிநேரம்) உங்கள் அறிவாற்றல், மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் காட்டுகிறது. ஆனால் தற்போது இருக்கும் பரபரப்பான உலகில், பலருக்கும் படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்துவிடுவதில்லை. சிலர் மருத்துவர் உதவியை நாடுவதுண்டு. ஒரு சிலர் தங்கள் மூதாதையர்கள் சொல்வதை கேட்டு, பண்டைய வழக்கங்களை கடைபிடிப்பதுண்டு சுவாரசியமாக, இந்த வழக்கங்கள் மருத்துவ உலகில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நெமுரி நெகோ- ஜப்பான்
ஜப்பானில், அலுவலக வேலையின் போதோ அல்லது ஆபீஸ் முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியிலோ, தூங்குவதற்கு நீங்கள் கிண்டல் அடிக்கப்படமாட்டீர்கள். காரணம், அந்த ஊரில் பலரும் இந்த வழக்கத்தை பின்பற்றுவதால், இது எதார்த்தமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 'நெமுரி நெகோ' என்றால், குட்டி தூக்கம் என்று பொருள்படும். அதாவது உங்கள் ஆற்றல் நிலைகளை ரீசார்ஜ் செய்ய நாள் முழுவதும், அவ்வப்போது 20 நிமிட தூக்கத்தை பின்பற்றுகிறார்கள். உங்கள் தூக்கம் யாரையும் தொந்தரவு செய்யாத வரை, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் குட்டி தூங்கலாம். மற்ற நாடுகளை பற்றி அடுத்தடுத்த பகுதியில் பார்க்கலாம்.