NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை?
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை?
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக முதலிடத்தில் உள்ளது.

    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை?

    எழுதியவர் Srinath r
    Nov 30, 2023
    04:12 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகில் மக்கள் வாழ மிக விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பொருளாதார புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் எந்த ஒரு இந்திய நகரமும் இடம்பெறவில்லை.

    பொருளாதார புலனாய்வு பிரிவு(Economist Intelligence Unit), அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால், இந்த ஆண்டு சராசரி வாழ்வாதார செலவுகள் 7.4% அதிகரித்துள்ளதாக கூறுகிறது.

    அதிகரிக்கும் வட்டி விகிதம், உலகளாவிய மோதல்கள் மற்றும் கடுமையான பாதிப்புகள் காரணமாக பணம் வீக்கம் குறையும் என, பொருளாதார புலனாய்வு பிரிவின், உலகளாவிய வாழ்க்கைச் செலவுத் தலைவரான உபாசனா தத் கணித்திருப்பதாக சிஎன்என் கூறுகிறது.

    2nd crd

    உலகின் டாப் 10 விலை உயர்ந்த நகை நங்கள் எவை?

    சிங்கப்பூர் மற்றும் ஸ்விட்சர்லாந்து தலைநகரான சூரிச் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளன.

    போக்குவரத்து, ஆடை, மளிகை பொருட்கள் மற்றும் மது உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை ஏற்றம், சிங்கப்பூரை கடந்த 11 ஆண்டுகளில், ஒன்பதாவது ஆண்டாக முதலிடத்தில் வைத்துள்ளது.

    சுவிஸ் நாணயமான பிராங்கின் வலிமை, மளிகை பொருட்கள், கேளிக்கை உள்ளிட்டவற்றின் விலையேற்றம், சூரிச் நகரை இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் வைத்துள்ளது.

    மூன்றாவது இடத்தை மற்றொரு ஸ்விட்சர்லாந்து நகரமான ஜெனிவாவும், அமெரிக்க நகரமான நியூயார்க்கும் பிடித்துள்ளன.

    3rd card

    தரவரிசையில் வீழ்ச்சி அடைந்த ஆசிய நகரங்கள்

    ஹாங்காங் இப்பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.

    பாரிஸ், கோபன்ஹேகன், சான் பிரான்சிஸ்கோ மற்றும் டெல் அவிவ் ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்தன.

    குறிப்பிடத்தக்க மாற்றமாக, ஆசிய நகரங்கள் குறைவான விலை ஏற்றத்தையே பதிவு செய்துள்ளன.

    இதனால்,பெய்ஜிங், நான்ஜிங், டேலியன் மற்றும் வுக்ஸி உள்ளிட்ட சீன நகரங்கள் மற்றும் ஜப்பானின் டோக்கியோ மற்றும் ஒசாகா நகரங்கள் இந்த ஆண்டு பட்டியலில் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ரஷ்ய நகரங்களான மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இந்த பட்டியலில் சரிவை கண்டுள்ளன. இந்த ஆண்டு தரவரிசையில் முறையே 105 இடங்கள் சரிந்து 142 ஆகவும், 74 இடங்கள் 147 ஆகவும் உள்ளன.

    4th card

    இந்த ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

    இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 173 நகரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 450% விலைவாசி உயர்வைக் கண்ட வெனிசுலாவின் கராகஸ் மற்றும் போரால் பாதிப்படைந்த கீவ் நகரங்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

    இந்த தரவுகள், 200 பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் 400க்கும் மேற்பட்ட தனிப்பட்ட விலைகளை ஒப்பிடுவதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது.

    மேலும், சிரியாவின் டமாஸ்கஸ், உலகின் மிகவும் மலிவான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிங்கப்பூர்
    உலகம்
    அமெரிக்கா
    சீனா

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    சிங்கப்பூர்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  இந்தியா
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   உலக செய்திகள்
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    உலகம்

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு இந்தியா
    சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC சீனா
    பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்  பிரான்ஸ்

    அமெரிக்கா

    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் ஹமாஸ்
    யூத எதிர்ப்பு கருத்தை ஆமோதித்த எலான் மஸ்க்.. கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை எலான் மஸ்க்
    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு காசா
    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்

    சீனா

    புதிய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்  மெர்சிடீஸ்-பென்ஸ்
    இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா அமெரிக்கா
    இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு  இந்தியா
    ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் 7 பதக்கங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025