இந்தியாவின் பழமையான நகரங்களையும் அவற்றின் காலத்தால் அழியாத அழகையும் பற்றி ஒரு பார்வை
செய்தி முன்னோட்டம்
பண்டைய நாகரிகங்கள், காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கும் நகரங்கள் மற்றும் சமூகங்களின் வடிவத்தில், தங்கள் இருப்புக்கான அறிகுறிகளை விட்டுச் சென்றன.
இந்தியாவின் வளமான வரலாற்றில் தங்கள் தடங்களை பதித்துள்ளன.
இந்தியாவில் உள்ள பல நகரங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையவை.
அவற்றின் தெருக்கள் கூட வாழும் அருங்காட்சியகங்களாக செயல்படுகின்றன.
இந்தியாவின் தொன்மையான வரலாற்றிற்கு இந்த நகரங்கள் அனைத்தும் ஒரு சான்றாக மாறியுள்ளது.
அப்படி, இந்தியாவில் உள்ள தொன்மையான நகரங்களை பற்றி ஒரு சிறு தொகுப்பு.
card 2
உஜ்ஜயினி
மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி "கோவில்களின் நகரம்" என்றும் குறிப்பிடப்படுகிறது.
இது இந்தியாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். உஜ்ஜயினி கிமு 700 க்கு முன்பே தோன்றியதாக வரலாறு கூறுகிறது.
மகாபாரதம் உட்பட ஆரம்பகால இந்து இலக்கியங்களில் இந்நகரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது .
ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த கும்பமேளா நகரத்திற்கு வருகிறார்கள்.
கும்பமேளா, உஜ்ஜைனி நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்தும் ஒரு பெரிய கொண்டாட்டமாகும்.
card 3
மதுரை
தமிழ்நாட்டின் இந்த 'கோவில் நகரம்' அதன் கலாச்சார முக்கியத்துவத்திற்காக புகழ்பெற்றது.
மதுரையின் முக்கிய ஈர்ப்பு மீனாட்சி அம்மன் கோயில்.
இக்கோவில், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடக்கலையாகும்.
பாண்டியர்களாலும், அதன்பின்னர் மதுரையை ஆண்ட நாயக்கர்களாலும் கட்டப்பட்டுள்ள இந்த அற்புதமான கோயிலைச் சுற்றி முழு நகரமும் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், மதுரை 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக கலாச்சாரம் மற்றும் வணிகத்தின் முக்கிய மையமாக இருந்து வருகிறது.
அதன் இலக்கிய தொன்மை மற்றும் வர்த்தக கலாச்சாரம் பற்றி பல சிலப்பதிகாரம் உட்பட பல பண்டைய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
card 4
வாரணாசி
காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, கங்கை ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ள நகரமாகும்.
இந்த நகரமும் கிமு 800 க்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது.
இது சிவபெருமானின் வீடாகக் கருதப்படுவதால் இது புனிதமான இந்து புனிதத் தலங்களில் ஒன்றாகும்.
உலகம் முழுவதும் இருக்கும் இந்து சமய வழிபாட்டாளர்களை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், வாரணாசி சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.
card 5
பாட்னா
முன்பு பாடலிபுத்ரா என்று அழைக்கப்பட்ட பீகாரில் உள்ள நவீன பாட்னா, 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது.
இந்த நகரம் புத்த மதத்தை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தது.
அதோடு மௌரிய மற்றும் குப்த அரசுகளின் தலைநகராக செயல்பட்டது.
இந்த இடத்தில்தான் மௌரிய மன்னர், அசோகர், புத்த மதத்தின் போதனைகளை ஏற்று பரப்பினார்.
அதனால் புத்தகர்களுக்கு வழிபாட்டு தலமாகவும் உள்ளது பாட்னா. அதுமட்டுமின்றி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் கணிதவியலாளர் ஆர்யபட்டாவின் தாயகமும் பாட்னா ஆகும்.
card 6
பூரி
ஒடிசாவில் உள்ள பூரி நகரம், சார் தாம் யாத்திரைத் தலங்களில் ஒன்றான ஜகன்னாதர் கோயிலுக்கு நன்கு அறியப்பட்டதாகும்.
2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்நகரம், நீண்ட காலமாக கலாச்சாரம் மற்றும் பக்தியின் மையமாக இருந்து வருகிறது.
பூரி பற்றிய குறிப்புகள் பல்வேறு வேதங்களில் காணப்படுகின்றன.
மகாபாரதத்தின் வனபர்வத்தில் இது ஒரு புனிதமான இடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு அமைந்துள்ள கோவில்களை, இந்து மதத்தை பற்றி கூறுவது மட்டுமின்றி, ஹோய்சாலா மன்னர்களின் கட்டிட கலைக்கும் எடுத்துக்காட்டாக அமைகிறது.