
நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
செய்தி முன்னோட்டம்
ஏமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்த வழக்கில், பாலக்காட்டைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா குற்றவாளி என, கடந்த 2018 ஆம் ஆண்டு கிழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் முயன்று வரும் நிலையில், மரண தண்டனையை ஏமன் அதிபர் மட்டுமே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏமன் செல்ல அனுமதிகோரி அவரது தாயார் பிரேமா குமாரி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
2nd card
யார் இந்த நிமிஷா பிரியா?
பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு தனியாக கிளினிக் தொடங்க, ஏமன் நாட்டவரான தலால் அப்தோ என்பவரின் உதவியை நாடியுள்ளார்.
ஏமன் நாட்டு சட்டப்படி, அங்கு தொழில் தொடங்கும் உரிமம் பெற உள்நாட்டு நபரின் உதவி வேண்டும்.
தலால் அப்தோ, நிமிஷா பிரியாவின் கணவரான டோனியின் நண்பர் ஆவார். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு டோனி பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்தியா திரும்பி விட்டார்.
நிமிஷா, 2015 ஆம் ஆண்டு தலால் அப்தோ உதவியுடன் கிளினிக் தொடங்கினார். கிளினிக்கில் நல்ல வருமானம் வர, தலால் அப்தோ தன் பங்கை கேட்டு நிமிஷாவை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
3rd card
அப்தோவை மயக்க மருந்து கொடுத்து கொலை செய்த நிமிஷா
மேலும் சில தகவல்களின்படி, தலால் அப்தோ நிமிஷா உடன் திருமணமானதற்கான போலியான ஆவணங்களை தயாரித்து, அவரை தன் மனைவி என்றும் சொல்லி வந்துள்ளார்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான தலால் அப்தோ, நிமிஷாவை தொடர்ந்து துன்புறுத்தியும், தாக்கியும் வந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு நிமிஷா அளித்த புகாரில், இதே குற்றத்திற்காக தலால் அப்தோ கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த தலால் அப்தோ, நிமிஷாவின் பாஸ்போர்ட்டை கைப்பற்றியதால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை.
பாஸ்போர்ட்டை திரும்ப பெறும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு தலால் அப்தோவிற்கு, நிமிஷா மயக்க மருந்து வழங்கியுள்ளார். மயக்க மருந்து அதிகமாகவே தலால் அப்தோ உயிரிழந்தார்.
4rd card
கொலை குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்தோ நிமிஷா
தலால் அப்தோ உயிரிழந்ததை மறைப்பதற்காக, அப்துல் என்பவருடன் சேர்ந்து அவரது பிணத்தை அகற்றியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் வெளியே தெரிய, நான்கு நாட்களுக்குப் பின் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த ஏமன் கிழமை நீதிமன்றம், 2018 ஆம் ஆண்டு நிமிஷாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தனது தண்டனைக்கு எதிராக நிமிஷா தொடர்ந்து போராடிவரும் நிலையில், அவரின் மேல்முறையீட்டு மனு ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.