NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜெகன் ரெட்டி-அதானி லஞ்சம் தொடர்பை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுப்பேன்: சந்திரபாபு நாயுடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெகன் ரெட்டி-அதானி லஞ்சம் தொடர்பை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுப்பேன்: சந்திரபாபு நாயுடு
    குற்றச்சாட்டுகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை உரையாற்றினார்

    ஜெகன் ரெட்டி-அதானி லஞ்சம் தொடர்பை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுப்பேன்: சந்திரபாபு நாயுடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2024
    07:17 pm

    செய்தி முன்னோட்டம்

    அதானி குழுமம், ஆந்திராவின் முந்தைய ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் லஞ்சம் பெற்றதாக சர்ச்சையை தூண்டிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.

    தனது அரசாங்கம் "நிலைமையை மதிப்பிட்டு" ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

    அரசாங்கத்தால் நடத்தப்படும் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன்(SECI), ஆந்திரப் பிரதேசம் மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததை அடுத்து, ஆகஸ்ட் 2021இல் தொழிலதிபர் கெளதம் அதானி, ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்ததாக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றச்சாட்டிலிருந்து இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    குற்றச்சாட்டு 

    அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டு

    அதானி, YSR ரெட்டி சந்திப்பின் போது "ஊக்குவிப்புகள்" பற்றி விவாதிக்கப்பட்டதாக SEC குற்றம் சாட்டியது, அதானி ஒப்பந்தத்தை பாதுகாக்க லஞ்சம் வழங்குவதாக அல்லது வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    விரைவில், ஆந்திரப் பிரதேசம் 7 ஜிகாவாட் சூரிய சக்தியை வாங்க ஒப்புக்கொண்டது, இது நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு. இது தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    உறுதி

    விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாயடு உறுதி

    மாநிலங்களவையில் தனது கருத்துக்களில், ஆந்திரப் பிரதேசத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகள் என்றும் மேலும் தகவல்கள் வெளிவரத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் நாயுடு உறுதியளித்தார்.

    மேலும்,"பல உண்மைகள் வெளிவரவில்லை. உண்மைகள் அவிழ்த்து வருவதால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் அரசு யோசித்து வருகிறது. நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து, என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்" என நாயுடு கூறினார்.

    அரசின் முதன்மைப் பொறுப்பு பொதுமக்களுக்குத் தான் என்று கூறிய முதல்வர்,"தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

    "இன்று வெளிவந்துள்ள இந்த விவகாரம், பொது மன்றத்தில் ஆந்திரா என்ற பிராண்டை மோசமாக சேதப்படுத்தியுள்ளது. இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது" என்று அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரபாபு நாயுடு
    ஜெகன் மோகன் ரெட்டி
    அதானி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சந்திரபாபு நாயுடு

    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி  ஆந்திரா
    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி  ஆந்திரா
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி ஆந்திரா
    பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்? காங்கிரஸ்

    ஜெகன் மோகன் ரெட்டி

    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா
    ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம் உயர்நீதிமன்றம்

    அதானி

    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள் பங்குச் சந்தை
    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025