Page Loader
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறார் TVK தலைவர் விஜய்
விஜய், 10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளை இன்று (மே 30) நேரில் சந்தித்து கவுரவிக்கிறார்

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறார் TVK தலைவர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
May 30, 2025
09:16 am

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை இன்று (மே 30) நேரில் சந்தித்து கவுரவிக்கிறார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் "விஜய் கல்வி விருது" விழாவில், 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் உட்பட, மொத்தமாக 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமீபத்தில் வெளியான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில், சட்டசபை தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மூன்று காட்டமாக நடைபெறும் இந்த விருது விழாவின் முதல்கட்டம் இன்று நடைபெறுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

88 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு

இந்த விருது விழாவுக்காக, சென்னை உள்ளிட்ட 88 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகளை விஜய் நேரில் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் மிகுந்த விமர்சையுடன் நடைபெற்று வருகின்றன. கல்வியில் சிறந்த முன்னேற்றம் காட்டிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் விஜய் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் காலை முதல் X -இல் '#VijayHonorsStudents' ட்ரெண்ட் ஆகி வருகிறது சென்ற ஆண்டு மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க நெக்லஸ் ஒன்றை விஜய் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post