
2026 தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை: மதுரை மாநாட்டில் TVK விஜய் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இன்று, மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்ற தனது கட்சியின்(தமிழக வெற்றி கழகம்) இரண்டாவது மாநில அளவிலான மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றினார். மாநாட்டில் தனது உரையில், விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, "எங்கள் ஒரே சித்தாந்த எதிரி பாஜக. ஒரே அரசியல் எதிரி திமுக. ஏதாவது 'அண்டர்கிரவுண்ட் ஆதாயத்துக்காக டீல் போட்டு கொண்ட கூட்டணி அமைத்து அரசியல் ஆதாயத்துக்காக ஊரை ஏமாற்றும் கட்சி தவெக அல்ல". "யாருக்காகவும் எதற்காகவும் பயம் கிடையாது. மாபெரும் பெண்கள் சக்தி, இளைஞர் சக்தி,மக்கள் சக்தி நம்முடன் இருக்கிறார்கள். உலகம் முழுதும் வாழும் அனைவரும் என்னை விஜய், விஜி, தளபதி, சொந்தம் கொண்டாடும் அன்பும் ஆசியும் நம்முடன் இருக்கும்"என்றார்.
ஆரவாரம்
திடல் முழுக்க நிறைந்திருந்த TVK தொண்டர்கள் கூட்டம்
"எந்த அடிமை கூட்டணியிலும் சேர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எங்கள் கூட்டணி சுயநல கூட்டணியாக இருக்காது. அது சுயமரியாதை சார்ந்த கூட்டணியாக இருக்கும்," என்று விஜய் அறிவித்து, அவரது ஆதரவாளர்களிடமிருந்து ஆரவாரங்களைப் பெற்றார். விஜய் தனது அரசியல் பயணத்தை விவரிக்க, "சிங்கம் எப்போதும் விசித்திரமானது. அது ஒரு முறை கர்ஜித்தால், எட்டு கிலோமீட்டர் வரை ஒலி அதிர்வுறும். இந்த வகையான சிங்கம் வேட்டையிலிருந்து மட்டுமே வெளிவரும். காட்டில் பல நரிகள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு சிங்கம் மட்டுமே இருக்கும். அது காட்டின் ராஜா. ஒரு சிங்கம் எப்போதும் சிங்கம்தான். இது ஒரு தெளிவான அறிவிப்பு," என்று அவர் கூறினார்.
விஜயகாந்த்
விஜயகாந்தை நினைவு கூர்ந்தார் விஜய்
மதுரை மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி விஜய் கூறுகையில், "மதுரை என்றால் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நமது வைகை ஆறுதான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை மீனாட்சி அம்மன்.இந்த மண்ணோட உண்மையான குணம் உணர்வுப்பூர்வமான மண். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமான ஆட்கள் தான்" "இந்த மண்ணில் கால் வைத்த பிறகு ஒருவரை பற்றி தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. சினிமானாலும், அரசியல் என்றாலும் சரி நமக்கு பிடித்தது எம்ஜிஆர்.அவரோடு பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அவரை போன்ற குணம் கொண்ட விஜயகாந்த்துடன் பழகும் நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவர் மதுரை மண்ணை சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா?." என்றார்.