NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 05, 2024
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (எஸ்இடிசி) மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

    06/09/2024 (வெள்ளிக் கிழமை முகூர்த்தம்) 07/09/2024 (சனிக்கிழமை விநாயக சதுர்த்தி), 08/09/2024 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 05/09/2024, 06/09/204 மற்றும் 07/09/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அறிக்கை

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அறிக்கை (தொடர்ச்சி)

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 05/09/2024, 06/09/2024 (வெள்ளிக் கிழமை) மற்றும் 07/09/2024 (சனிக் கிழமை) ஆகிய நாட்களில் 1030 பேருந்துகளும், மற்றும் 08/09/2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 06/09/2024 (வெள்ளிக் கிழமை மற்றும் 07/09/2024 (சனிக்கிழமை) அன்று 190 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 06/09/2024 வெள்ளிக்கிழமை மற்றும் 07/09/2024 (சனிக்கிழமை) அன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அறிக்கை

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அறிக்கை (தொடர்ச்சி)

    பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .

    இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 23,514 பயணிகளும் சனிக்கிழமை அன்று 6,961 பயணிகளும் ஞாயிறு அன்று 21,650 பயணிகளும் பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    அறிக்கை

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அறிக்கை (தொடர்ச்சி)

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அரசு போக்குவரத்துக் கழகம் அறிக்கை

    தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயக சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
    - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.#ArasuBus | #TamilNadu | #BusOperation |… pic.twitter.com/k0Zm3yNW2z

    — ArasuBus (@arasubus) September 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விநாயகர் சதுர்த்தி
    பேருந்துகள்
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: GTக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுமா?  குஜராத் டைட்டன்ஸ்
    நானியின் 'HIT 3' Netflix இல் வெளியாகிறது, இந்த தேதியில்! நெட்ஃபிலிக்ஸ்
    எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA விமான நிலையம்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு  தமிழக அரசு
    பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது  சிவகங்கை
    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது? இந்தியா
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  உயர்நீதிமன்றம்

    பேருந்துகள்

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு சென்னை
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு  கோயம்பேடு
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  சென்னை
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்

    தமிழ்நாடு

    வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் பேருந்துகள்
    தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் முதலீடு
    திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள்; வட்டார கல்வி இயக்குனர்களுக்கு பறந்த மெமோ தமிழக அரசு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்

    தமிழக அரசு

    அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர்
    இனி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம் மருத்துவம்
    ஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி MLAகள், ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி திமுக
    காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தமிழக அரசின் 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025