NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் 
    மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வில் ஈடுபட்ட, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.

    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் 

    எழுதியவர் Srinath r
    Dec 03, 2023
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    புயல் பாதிப்பால் நாளை(டிசம்பர் 4) தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் நாளை, வட தமிழக கரையோர மாவட்டங்களை வந்தடையும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில்,

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

    இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தவர், நாளை புயல் பாதிப்பால் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்விக்கு,

    இன்று மாலைக்குள் முதல்வர் அறிவிப்பார் என தெரிவித்தார். மேலும், தனியார் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆய்வு

    #மிக்ஜாம்_புயல் உருவானதை தொடர்ந்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

    தயார் நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை !@mkstalin @CMOTamilnadu pic.twitter.com/pcgcG2P509

    — KKSSR Ramachandran (@KKSSRR_DMK) December 3, 2023

    2rd card

    புயலால் 118 ரயில்கள் ரத்து

    புயல் எச்சரிக்கையை முன்னிட்டு, இன்று ஏழு மாவட்டங்களில் மிக கனமழையும், ஒன்பது மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

    நாளை சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் மிக கனமழையும், இரண்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 இதர நிவாரண முகாம்களும் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கி, அவர்கள் கரை திரும்புவதை அரசு உறுதி செய்து வருகிறது.

    புயலால், 118 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    3rd card

    தயார் நிலையில் மீட்பு வீரர்கள்

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 350 வீரர்களை கொண்ட 14 குழுக்கள் மற்றும் தேசிய மீட்பு படையின் 225 வீரர்களை கொண்ட 9 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள, சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

    மாநில மற்றும் மாவட்ட அளவிலான அவசர செயல்பாட்டு மையங்கள், 24 மணி நேரமும் கூடுதல் அலுவலர்களுடன் இயங்குகின்றன.

    சென்னையில், 348 பேர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 162 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    புயல் குறித்து எடுக்கப்பட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது அரசு

    வங்கக் கடல் பகுதியில் “மிக்ஜாம்” புயல் சின்னம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.@KKSSRR_DMK அவர்கள் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை.#CMMKSTALIN #TNDIPR@mkstalin pic.twitter.com/CY8PIH7EUb

    — TN DIPR (@TNDIPRNEWS) December 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புயல் எச்சரிக்கை
    வங்க கடல்
    முதல் அமைச்சர்
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    புயல் எச்சரிக்கை

    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? அமெரிக்கா
    வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு

    வங்க கடல்

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! காற்றழுத்த தாழ்வு நிலை
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா

    முதல் அமைச்சர்

    சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்  சுதந்திர தினம்
    55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்
    முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை; போக்குவரத்து மாற்றம் ஸ்டாலின்
    ஹிமாச்சல பிரதேச கனமழை எதிரொலி - 74 பேர் பலி, ரூ.10,000 கோடி சேதம் என தகவல்  ஹிமாச்சல பிரதேசம்

    மு.க ஸ்டாலின்

    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு  தமிழக அரசு
    தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா.விருது அறிவிப்பு விருது
    நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தினை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  சுங்கச்சாவடி
    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025