LOADING...
முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள்: சட்டசபையில் வெளியாகுமா மகளிருக்கான ₹2,500 மற்றும் தங்க மோதிர அறிவிப்புகள்?
விஜய் இன்று தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள்: சட்டசபையில் வெளியாகுமா மகளிருக்கான ₹2,500 மற்றும் தங்க மோதிர அறிவிப்புகள்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 22, 2026
07:37 am

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் இன்று தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த மே 10, 2026 அன்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இம்முறை எதிர்பார்ப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், இன்றைய தினம் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய அரசு கொள்கைகள் சார்ந்த அதிரடி அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா என்ற ஆவல் எழுந்துள்ளது.

திட்டங்கள்

மகளிருக்கு காத்திருக்கும் 'சர்பிரைஸ்' திட்டங்கள்?

முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, குறிப்பாக பெண்களுக்கு பயன் தரும் வகையிலான சில முக்கியத் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விவாதத்தில் இருக்கும் முக்கிய திட்டங்கள்: தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம். ஏழைப் பெண்களின் திருமணத்தின் போது பட்டுப்புடவையுடன் ஒரு சவரன் தங்கம் வழங்கும் புதிய திருமண நிதியுதவித் திட்டம். தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் அனைவரும் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கும் சேவை. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம். தமிழகத்தின் தற்போதைய நிதிச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்புகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகுமா அல்லது ஏமாற்றம் மிஞ்சுமா என மக்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Advertisement