தமிழகத்தில் இன்று கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், இன்று மாநிலத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. IMD வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை
டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களின் வானிலை
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட சூழலில், இந்த மழை பொழிவு வெப்பத்தைத் தணித்து சூழலைக் குளிர்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 9 ஆம் தேதி தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை விலகும் சூழலில், வெப்பச்சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.