LOADING...
தமிழகத்தில் நிறைவு பெற்றது வாக்கு எண்ணிக்கை; 108 தொகுதிகளை கைப்பற்றியது TVK
108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது TVK

தமிழகத்தில் நிறைவு பெற்றது வாக்கு எண்ணிக்கை; 108 தொகுதிகளை கைப்பற்றியது TVK

எழுதியவர் Venkatalakshmi V
May 05, 2026
06:14 am

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு வரலாற்றுத் திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு ஒரு புதிய கட்சி முன்னேறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலின் மிகப்பெரிய ஆச்சரியமாக, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார். ஆளும் கட்சியாக இருந்த திமுக, இம்முறை வெறும் 59 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வெற்றி விவரங்கள்

கூட்டணி வாரியான வெற்றி விவரங்கள்

தமிழகத்தின் 234 தொகுதிகளில் கட்சிகள் பெற்ற இடங்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் இதோ தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108* திமுக கூட்டணி 73 அதிமுக கூட்டணி 53 நாம் தமிழர் கட்சி 0 திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5 இடங்களையும், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களையும் வென்றுள்ளன. அதிமுக கூட்டணியில் அதிமுக 47 இடங்களிலும், பாமக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மற்றும் அமமுக தலா 1 இடத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளன.

வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதத்தில் விஜய்யின் ஆதிக்கம்

வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, தவெக 34.92% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. தவெக: 1,72,26,030 வாக்குகள் (34.92%) திமுக: 1,19,28,996 வாக்குகள் (24.19%) அதிமுக: 1,04,62,146 வாக்குகள் (21.21%) நாதக: 19,72,520 வாக்குகள் (4%) திருப்பத்தூர் தொகுதியில் வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றது இத்தேர்தலின் மிக நெருக்கமான போட்டியாகக் கருதப்படுகிறது.

Advertisement