பாலியல் புகார்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
பாலியல் புகார்களை சரியாக விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர், "போக்சோ சட்டத்தைப்பற்றி ஆலோசனையும் நடந்தது. பாலியல் புகார்கள் தடுப்பதற்காக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அரசியல் செய்ய இடம் கொடுக்கக் கூடாது. இதில் தாமதம் ஏற்பட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING || பாலியல் புகார் - பள்ளிகல்வித்துறை அதிரடி
— Thanthi TV (@ThanthiTV) February 13, 2025
அரசு பணியாளர்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டம்
பாலியல் புகாரில் சிக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை திருத்த முடிவு
குழந்தைகள் நல ஆணையம், காவல்துறை உள்ளிட்டோருடன்… pic.twitter.com/x64HSylVDX
ஒழுங்கு நடவடிக்கை
கல்வி சான்றுகளை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை
முன்னதாக பாலியல் வழக்கில் சிக்கிய 255 ஆசிரியர்களின் கல்வி சான்றுகளை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, 255 பள்ளி ஆசிரியர்களின் கல்வி சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்ய, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் கூறினார்.
"பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற தண்டனை வழங்கப்படும். அரசு பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில், தகுந்த உளவியல் ஆலோசகர்கள் வழியே, அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்" என ஏற்கனவே அரசாணை அனுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.