தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானா சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து, அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்கிறார்.
இன்று மதியம் 1.04 மணிக்கு ஹைதராபாத்தின் எல்பி மைதானத்தில் நடக்கும் பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயக மற்றும் வெளிப்படையான ஆட்சியை வழங்கும் ஒரு 'மக்கள் அரசாங்கம்' டிசம்பர் 7 ஆம் தேதி பதவியேற்கவுள்ளதால், திரளான மக்கள் நிகழ்வில் பங்கேற்குமாறு, ரேவந்த் ரெட்டி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், இவ்விழாவில் ஒரு லட்சம் மக்கள் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2nd card
பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்கள்
எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற குழு தலைவரான மல்லு பாட்டி விக்ரமார்கா துணை முதல்வராக பொறுப்பேற்பரர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, ரேவந்த் ரெட்டியின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.
இது தவிர, கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
டி.கே.சிவக்குமார் தெலுங்கானா தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
119 இடங்களில் கொண்ட தெலுங்கானா சட்டமன்றத்தில், 64 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.