LOADING...
டெல்லியில் பெய்த கனமழை: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது
கனமழையால் டெல்லி-என்.சி.ஆர்., பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

டெல்லியில் பெய்த கனமழை: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது

எழுதியவர் Venkatalakshmi V
Aug 09, 2025
09:08 am

செய்தி முன்னோட்டம்

சனிக்கிழமை பெய்த கனமழையால் டெல்லி-என்.சி.ஆர்., பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன, ஃப்ளைட்ராடரின் தரவுகளின்படி 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகவும், நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று டெல்லி முழுவதும் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. கிழக்கு மற்றும் மத்திய டெல்லியில் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாள் முழுவதும் மிதமானது முதல் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விமான தாமதங்கள் குறித்து பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்குமாறு IGI விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. "ஐஎம்டி முன்னறிவிப்பின்படி, டெல்லியில் மோசமான வானிலை நிலவுகிறது. இருப்பினும், செயல்பாடுகள் தற்போது இயல்பானவை" என்று தெரிவித்துள்ளது.

வட மாநிலங்கள்

வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை

டெல்லியில் பல பகுதிகளில், இரவில் தொடங்கிய மழை, காலை வரை அதே தீவிரத்துடன் தொடர்ந்தது. இதனால் பல சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின, தெருக்களில் தண்ணீர் தேங்கியது. இதற்கிடையில், அண்டை மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் சனிக்கிழமை தொடர்ந்து மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் மூன்று மாவட்டங்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 20 முதல், மழை தொடர்பான சம்பவங்களால் இமாச்சலப் பிரதேசத்தில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.