நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நான்காம் நாளான இன்று, குடியரசு தலைவர் உரையாற்றுகிறார். மூன்றாவது முறையாக NDA கூட்டணி அரசு அமைத்த பிறகு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இன்று இரு அவைகள் சேர்ந்த கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் உரையினை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, உறுப்பினர்களால் விவாதிக்கப்படும். 18வது நாடாளுமன்ற கூட்டத்தொடர், கடந்த திங்களன்று துவங்கியது. அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் பதவிபிரமாணம் மேற்கொண்டனர். பின்னர், சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சு வார்த்தை தோல்வியுற்றதால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
நேற்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தல்
நேற்று அவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் NDA கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்ட ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வானார். அவரை ஆளும் கட்சி தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்தி, சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர். ராகுல் காந்தி தனது வாழ்த்து செய்தியில், அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும் சபாநாயகராக, மக்களவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் மக்களின் குரலின் இறுதி நடுவர் பிர்லா என்றும் கூறினார். அவைக்கு நன்றி தெரிவித்த ஓம் பிர்லா, நாடாளுமன்ற நடைமுறையைப் பின்பற்றுவதாகவும், வரவிருக்கும் அமர்வுகளில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்று நம்புவதாகவும் கூறினார்.
'இந்திய வரலாற்றில் கருப்பு அத்தியாயம்...': பிர்லா அவசரநிலை
எமர்ஜென்சி பற்றி பேசிய பிர்லா, "1975ல் எமர்ஜென்சியை அமல்படுத்தும் முடிவை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது. இதனுடன், எமர்ஜென்சியை எதிர்த்த அனைவரின் மன உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம்... அத்தியாயம்... இந்த நாளில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை விதித்து, பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்கினார்" என தெரிவித்தார். சபாநாயகர் அறிக்கையை வாசித்ததையடுத்து மக்களவையில் அமளி ஏற்பட்டது. "அவசரகாலத்தின் இருண்ட நாட்கள்" என்று அவர் குறிப்பிட்டது எதிர்க்கட்சியினரிடம் இருந்து சலசலப்பை ஏற்படுத்தியது. இது வியாழன் வரை (இன்று) அமர்வை ஒத்திவைக்க வழிவகுத்தது.