LOADING...
வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இடையே பிரதமர் மோடிக்கு டிரம்பிடமிருந்து வந்த பிறந்தநாள் அழைப்பு
பிரதமர் மோடிக்கு டிரம்பிடமிருந்து வந்த பிறந்தநாள் அழைப்பு

வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இடையே பிரதமர் மோடிக்கு டிரம்பிடமிருந்து வந்த பிறந்தநாள் அழைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 17, 2025
07:55 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வாழத்துக்களை தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது மற்றும் உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கு குறித்து பல வாரங்களாக கடுமையாக சாடியதை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் அமைதிக்கான நிலைப்பாட்டை வரவேற்று தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்துகொண்டார் டிரம்ப். உக்ரைன் போரை நீடிப்பதற்கு இந்தியா உடந்தையாக இருப்பதாக கூறி இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் செவ்வாயன்று, அவர் பிரதமர் மோடியை அழைத்து, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

வாழ்த்து

டிரம்ப்பின் பிறந்த நாள் வாழ்த்து

ட்ரூத் சோஷியலில், டிரம்ப், பிரதமர் மோடிக்கான தனது பிறந்தநாள் செய்தியை வெளியிட்டார்: "எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு அற்புதமான தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவர் ஒரு மகத்தான பணியைச் செய்கிறார். நரேந்திர: ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உங்கள் ஆதரவிற்கு நன்றி!" என்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பதில்

வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் 

அதிபர் டிரம்ப்பின் வாழ்த்து செய்திக்கு பிரதமர் மோடி, X இல் கவனமாக வடிவமைக்கப்பட்ட பதிவோடு பதிலளித்தார்: "எனது நண்பர், ஜனாதிபதி டிரம்ப், எனது 75வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களைப் போலவே, இந்தியா-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்." என்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நிலைப்பாடு

மாறி வரும் காட்சிகளும், நிலைப்பாடும்

சில வாரங்களுக்கு முன்பு, வாஷிங்டன் இந்தியாவை கடுமையாகக் கண்டித்து வந்தது, மாஸ்கோவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததே போருக்கு எரிபொருளாக இருந்ததாகக் குற்றம் சாட்டியது. இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தது, மேலும் ரஷ்ய இறக்குமதிகளுடன் இணைக்கப்பட்ட மற்றொரு 25 சதவீத வரியை தொடர்ந்து விதித்தது. இதனால் முடங்கி போன இரு நாட்டு உறவுகள், இந்த மாத தொடக்கத்தில் மாறத் தொடங்கியது. செப்டம்பர் 6 ஆம் தேதி, டிரம்ப் தனது தொனியை மென்மையாக்கினார், இந்தியா-அமெரிக்க பிணைப்பை "சிறப்பு" என்று அழைத்தார். அதைத் தொடர்ந்து வந்த நாட்களில், வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து டிரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிலிருந்து அதிகாரிகள் புது டெல்லியை வந்தடைந்தனர்.