NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம் 
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம்

    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 19, 2023
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் விரைவு ரயிலில் சிக்கிய 500 பயணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 3வது நாளாக இன்று(டிச.,19)வரை சிக்கி தவிக்கிறார்கள்.

    இவர்களுக்கு உணவினை ஹெலிகாப்டர் கொண்டு வழங்க முயற்சிக்கப்பட்டது.

    ஆனால் ரயில் நிலையத்தை ஹெலிகாப்டரால் அணுக முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    கனமழை 

    பயணிகளை மீட்பது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை 

    இந்நிலையில் ரயிலில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    அதில், தாழையூத்து-கங்கைகொண்டான் தடத்தில் 7.71கி.மீ.,தூரத்திற்கு ரயில்பாதை பாதிக்கப்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது.

    நயினார் குளம் நிரம்பியதால் திருநெல்வேலி ரயில் நிலையம் நீரில் மூழ்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    அதேபோல் தூத்துக்குடி செய்துங்கநல்லூர்-ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்களில் 12.16கி.மீ.,தொலைவிற்கு ரயில் தண்டவாளத்திலுள்ள சரளை கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    வெள்ளம் வடிந்தவுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே பொறியியல் பிரிவினை சேர்ந்த ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் 

    நிலைமை சீரடைந்ததும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்படும்

    மேலும் நிலைமை சீரடைந்ததும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் அனைவரும் இன்று மீட்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

    கடந்த ஞாயிறு இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் 33 கி.மீ.,பயணத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணத்திற்காக இரவு 9.19க்கு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதில் 800 பயணிகள் சிக்கிய நிலையில் திங்கட்கிழமை அதிகாலை தமிழக அரசு மீட்பு பணியாளர்கள் இவர்களுள் 300 பேரை மீட்டு 2 வேன்கள் மற்றும் 4 பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு ஓர் பள்ளியில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.

    சிக்கல் 

    சாலையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மீட்பு பணிகள் பாதிப்பு 

    அதன் பின்னர், சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீட்பு பணியினை தொடர முடியவில்லை.

    தொடர் மழை காரணமாக பயணிகளை மீட்பு குழுவினரால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

    எனினும், ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இரவில் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிரமம் இருப்பதால் இன்று பயணிகளை மீட்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.

    அவ்வாறு மீட்கப்படும் பயணிகள் வாகனங்கள் கொண்டு அழைத்து வரப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தின் தற்போதைய நிலை 

    #JUSTIN வெள்ளத்தால் சூழப்பட்ட ஸ்ரீவைகுண்டம்
    ரயில் நிலையம் pic.twitter.com/5lIpCTpzCC

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) December 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மீட்பு பணி
    திருநெல்வேலி
    தூத்துக்குடி
    கனமழை

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்

    மீட்பு பணி

    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு உத்தரகாண்ட்
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள் மு.க ஸ்டாலின்

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் மு.க ஸ்டாலின்
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    உயிருள்ள மூதாட்டியை சுடுகாட்டில் வீசிச் சென்ற உறவினர்கள் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் காவல்துறை

    தூத்துக்குடி

    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு
    தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி கொரோனா

    கனமழை

    மிக்ஜாம் புயல்: யாருக்கெல்லாம் இன்று விடுமுறை? எந்தெந்த சேவைகள் இன்று இயங்காது? சென்னை
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை  சென்னை
    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்  சென்னை மாநகராட்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025